Author: ஜோசப் பால்ராஜ்
•11:46 PM
இது காதலர் தின சிறப்பு பதிவு.

கலாச்சாரத்த காப்பாத்துறோம்னு காதலர் தினத்தன்னைக்கு ஒன்னா இருக்க காதலர்களுக்கு எல்லாம் கட்டாயமா திருமணம் செஞ்சுவைப்போம், இல்லைன்னா அந்த பொண்ண விட்டு பையனுக்கு ராக்கி கட்ட வைப்போம்னு ஒரு கூட்டம் கிளம்பியிருக்கு. ( என்னா ஒரு வில்லத்தனம்??)

இவங்க திட்டத்த கேட்டு அப்டியாவது நமக்கெல்லாம் கல்யாணம் ஆகாதான்னு இங்க ஒரு தொழிலதிபர் பட்டு வேட்டி கட்டிக்கிட்டு சனிக்கிழமை கோயம்புத்தூர்ல இருந்து பெங்களூருக்கு வர திட்டம் போட்டுக்கிட்டு இருக்கத வேற தகவல் வருது. ( இந்த தொழிலதிபருக்கு எந்த பொண்ணையாச்சும் கட்டாயத் திருமணம் செஞ்சு வைக்க முயற்சி செஞ்சா,அந்த பொண்ணு ஒரு ராக்கி என்ன 100 ராக்கி கட்டுறேன்னு கைல மட்டும் இல்ல கழுத்துல கூட ராக்கி கட்டிட்டு தப்பிச்சுடும், இருந்தாலும் அந்த அளவுக்கு சோதனை தேவையா? )


இவங்க ஆர்பாட்டத்த எதிர்த்து இன்னொரு கூட்டம் இவங்களுக்கு பிங்க் கலர் பெண்கள் உள்ளாடை அனுப்ப கிளம்பியிருக்கு.( என்ன ஒரு அருமையான ஆயுதம்???, அப்ப பாகிஸ்தானுக்கு எதிர்ப்பு தெரிவிக்கனும்னா என்ன செய்வானுங்க??)

இம்புட்டு பேராடா வேலையில்லாம அலையிறீங்க? அடப் கெரகமே. என்ன செய்யிறதுன்னு தெரியாம அலையிறீங்களா? இந்த காதலர் தினம் எல்லாம் வருசத்துக்கு ஒரு தடவ தான் வரும், அப்ப மட்டும் நீங்க இந்த அலப்பற அடிக்கிறத விட்டுட்டு கீழ சொல்லியிருக்க வேலைய எல்லாம் செஞ்சீங்கன்னா, வருசம் முழுக்க வேலை இருந்துகிட்டே இருக்கும்.
இப்ப உங்கள எதிர்த்து ஜட்டி அனுப்புறவன் எல்லாம் உனக்கு பூங்கொத்து அனுப்புவான், உங்கூட சேர்ந்துக்க கூட செய்வான்.

உங்களால உருப்படிய யோசிக்க முடியாதுன்னு தெரியும், அதான் உங்களுக்காக நான் கொஞ்சம் யோசிச்சு சொல்லியிருக்கேன். இதுவும் செய்ய சுவரசியமாத்தான் இருக்கும். நீங்க அப்பாவி காதலர்கள மிரட்டி உங்க வீரத்த காட்டுறதுக்கு பதிலா இப்டி உருப்படிய வீரத்த காட்டுனா நல்லா இருக்கும். எங்க முடிஞ்சா இதையெல்லாம் செய்யப்பாருங்க .

1) ஊர்ல எங்க பார்த்தாலும் குப்பையும், கூளமுமா இருக்கே அத சுத்தம் பண்ணுங்க, பொது இடத்துல குப்பை போடுறவன பொளேர்னு அடி, கம்பத்த பார்த்தா காலத்தூக்குற நாய் மாதிரி கண்ட இடத்துலயும் அசிங்கம் பண்றவன விரட்டி விரட்டி அடி.

2) எல்லா அரசாங்க அலுவலகத்துக்கும் போங்க, அங்க எந்த வேலையா போனாலும் அநியாயமா லஞ்சம் வாங்குறானுங்களே மொள்ள மாறிங்க, அவிங்களுக்கு ஆப்பு வையிங்க. லஞ்சம்னு எவனும் கேட்கவே பயப்புடனும் அப்டி அடி.

3) எல்லாத் திறமையும் இருந்து படிக்க வழியில்லாம கஷ்டப்படுற ஏழைப்பசங்களுக்கு உதவி பண்ணு. கல்விய கூறு போட்டு விக்கிற வியாபரிய ஓட ஓட விரட்டியடி. கஷ்டப்பட்டு காசு குடுத்து படிக்கிற மாணவக் கூட்டம் உன் பின்னாடி வரும்.

4) சாலையில பல இடங்கள்ல போற வர்ற வண்டிய எல்லாம் மடக்கி, கைய நீட்டுற காவலர்கள கண்டா இந்தியன் தாத்தா மாதிரி மரியாதை செஞ்சு அனுப்பு.

5) ஒரு நாளைக்கு ஒரு சாலையின்னு திடீர்னு போயி நில்லுங்க,எவன் தேவையில்லாம ஹாரன் அடிக்கிறானோ அவன பொடேர்னு அடி, விதிமுறைய மீறுனா வண்டிய புடுங்கிடு.

6) எல்லா ஊர்லயும் எந்த வசதியிருக்கோ இல்லையோ, குடிசைப் பகுதிகள் கட்டாயம் இருக்கும், அது தேர்தல் நேரத்துல மட்டும் தான் அரசியல்வாதிகளுக்கு நினைப்பு வரும், அங்க போயி அவங்களுக்கு தேவையான வசதிகள செஞ்சு கொடு. இதுக்கெல்லாம் நீ உன் கை காச செலவு செய்ய வேண்டாம், அரசாங்க அதிகாரிகள புடிச்சு கொண்டுவந்து செய்ய வைய்யி. குடிசையில இருக்கவங்க எல்லாம் உனக்கு கோயில் கட்டுவாங்கள்ல? நீ செஞ்சு வைச்சுருக்க வசதிய எல்லாம் உபயோகிக்காம குடிசைய சுத்தி குப்பைய எவனாச்சும் போட்ட அடி.

(படிக்கிறவங்களுக்கு இதே மாதிரி நல்ல யோசனைகள் தோன்றினால் உடனே பின்னூட்டமிடுங்கள்)

இப்டி உருப்புடியா செய்ய ஆயிரம் வேலை இருக்கப்ப, காதலர்கள அடிக்கிறேன், கல்யாணம் செஞ்சு வைக்கிறேன்னு கிளம்புறது எந்த விதத்துல நியாயம்?

மேல சொன்னதையெல்லாம் செய்ய முடியாதுல்ல? அங்கயெல்லாம் போயி உன்னால வீரத்த காட்ட முடியாதுல்ல? அப்டியே ஒரு வேளை போயி அடிச்சா, உனக்கு டின்னு கட்டிருவான்னு தெரியும்ல, ஊருக்கு பயந்து, வீட்டுக்கு தெரியாம காதலிக்கிறவனுங்ககிட்டத்தானே உன் வீரத்த காட்ட முடியும்?

என்னைய கூடத்தான் எந்த பொண்ணும் காதலிக்கல, அதுக்காக நான் என்ன எல்லா காதலர்களையும் பார்த்து பொறமைப் பட்டுக்கிட்டா இருக்கேன்? இல்ல உங்கள மாதிரி வில்லத்தனமா யோசிக்கிறேனா? இவ்ளோ நல்லா யோசிக்கிறேன்ல. அப்டி நீங்களும் நல்லபடியா யோசிங்கய்யா.

கடைசியா ஒரு சின்ன வேண்டுகோள், நீ என்ன சொல்றது நாங்க என்ன செய்யிறதுன்னு உங்க செயற்குழு தீர்மானம் போட்டுருச்சுன்னா, குறைந்தபட்சம் உங்க அமைப்போட பெயரையாச்சும் மாத்திருங்கய்யா. பாவம் இராமரு. அயோத்தியில ஆரம்பிச்சு ஆதம் பாலம் வரைக்கும் அவரு அடி பின்னி எடுத்துட்டீங்க. போதும் விட்ருங்க அவர, இதுக்கு மேல அவரால தாங்க முடியாது. அதான் ஏற்கனவே ஒரு கட்சி ஒட்டு மொத்தமா அவரக் குத்தகைக்கு எடுத்து கும்மிக்கிட்டு இருக்குல்ல, அப்றம் என்ன போட்டிக்கு நீங்க வேற?

பிற்சேர்க்கை:
இந்த இராம் சேனா, பிங்க் ஜட்டி கூட்டம் எல்லாம் போதாதுன்னு வா(மு)ட்டாள் நாகரசு வேற கலத்துல எறங்கிட்டாரு இப்ப. அவரு காதலர்களுக்கு ஆதரவா அவங்க ஊரச் சுத்தி வர்றது வாகன வசதி செஞ்சுத் தரப்போறாராம்.

எத்தனையோ கிராமங்கள்ல காலையில பள்ளிக்கூடத்துக்கு போறதுக்கு கூட பேருந்து வசதியில்லாம எம்புட்டு குழந்தைங்க நடந்து போயி படிச்சுட்டு வர்றாங்க. அவங்களுக்கு வாகன வசதி செஞ்சுத் தரலாம்ல இவரு? இவரு தமிழ்நாட்டை எதிர்கிறதுல மட்டும் தான் கோக்குமாக்கா யோசிப்பாருன்னு நினைச்சேன், அப்டியெல்லாம் இல்லீங்க, நாங்க எப்பவுமே இப்டித்தான் கோக்கு மாக்காத்தான் யோசிப்போம்னு நிருபிச்சுக்கிட்டு இருக்காரு. Udanz
Links to this post
Author: ஜோசப் பால்ராஜ்
•10:30 PM
எனது ஐம்பதாவது பதிவாக நான் எழுதிய சுந்தரி டீச்சர் எனும் பதிவை படித்தவர்களுக்கு என் 17 வருடத் தேடல் தெரிந்திருக்கும்.

இரண்டு வாரங்களுக்கு முன்னர் இந்தியப் பயணம் மேற்கொண்டிருந்த சிங்கையின் மூத்தப்பதிவர் கோவி.கண்ணண் அண்ணண் அவர்கள் தனது இப்பயணத்தின்போது நாகையில் அரும்பாடுபட்டு எனது மதிப்பிற்குறிய டீச்சரின் தற்போதைய இருப்பிடம், தொலைபேசி எண் ஆகியவற்றை கண்டறிந்து எனது 17 வருட தேடலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்து, என்னை அளவில்லாப் பேரின்பத்தில் ஆழ்த்திவிட்டார்.

டீச்சரின் தொலைபேசி எண் கிடைத்த உடனே தொடர்பு கொண்ட நான் என் ஊர் பெயரான மாரநேரியை சொல்லி முடிக்குமுன்னர் டீச்சர் யாரு பால்ராஜா, டைட்டஸா(என் அண்ணண்) என கேட்டது அதைவிட ஆனந்தம். டீச்சரும் எங்களை மறக்கவில்லை என அறிந்த போது மிக மிக மகிழ்சியடைந்தேன்.

அடுத்த முறை இந்தியப் பயணம் எப்போது செய்வேன், எப்போது என் டீச்சரை நேரில் சந்திப்பேன் என மிக ஆவலாய் உள்ளேன்.

தனது இந்தியப் பயணத்தில் இடைவிடாது பல இடங்களுக்கும் சென்று பல பதிவுலக நண்பர்களையும் சந்தித்து அளவில்லா மகிழ்சியில் ஆழ்த்திய கோவியார், இந்தப் பயணத்தின் வாயிலாக எனக்கு செய்துள்ள உதவி என் வாழ்நாளில் எந்நாளும் மறக்க இயலாது. நன்றி என்று சொல்லி அவரை அந்நியப்படுத்த விரும்பவில்லை.

அண்ணண் அப்துல்லா தனது பதிவில் வலையுலக உறவுகளைப் பற்றி சொல்லியிருந்த இந்த வாக்கியம் "எங்களுக்கெல்லாம் இது வெறும் வலை உறவு அல்ல! வாழ்க்கை உறவு!" எத்தனை சத்தியமான சொற்கள் இவை? Udanz
Links to this post
என்னைய மதிச்சு வந்ததுக்கு ரொம்ப நன்றிங்க