இன்று மாலை சிங்கை மூத்தப்பதிவர் திரு.கோவி.கண்ணண் அவர்கள் இளம் பதிவராகிய என்னை சந்திக்க வந்தார்.
எனது இல்லத்தில் சுமார் 1 மணிநேரம் நடந்த இச்சந்திப்பில் சிங்கை பதிவர்களை குறித்தும், தமிழ் வலைப்பூ உலகம் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்தும், இந்த சிக்கல்களில் எல்லாம் சிக்காமல் எப்படி எழுதுவது என்பது குறித்தெல்லாம் பல ஆலோசனைகளை எனக்கு வழங்கி உதவினார்.
மேலும் சிங்கையில் ஆகஸ்ட் மாதம் 3 ஆம் நாள் அன்று நடைபெற உள்ள மாபெரும் சிங்கை பதிவர் சந்திப்பைக் குறித்தும் நாங்கள் பேசினோம். மிக உபயோகமான பல விடயங்களை குறித்து பேசிய அந்த சந்திப்பு சிற்றுண்டியுடனும், தேநீருடனும் முடிந்தது.
என்னடா குசும்பண கண்டிக்கிறேன்னு தலைப்பு வைச்சிட்டு அண்ணண் கோவி.கண்ணணுடன் நடந்த சந்திப்பை பற்றி எழுதுறானேனு நினைக்கலாம்.
நானும், நண்பர் குசும்பணும் தகவல் தொழில்நுட்ப முதுகலை படிப்பில் ஒரே வகுப்பில் படித்தவர்கள், நீண்ட நாள் நண்பர்கள் என்பதால் கோவி.க அண்ணணுடன் சந்திப்பு குறித்து வலையுரையாடலில் தெரிவித்த போது, நீங்க என்ன பேசிக்கிட்டீங்கன்னு கேட்டதால சில விவரங்கள அவருகிட்ட சொல்லிகிட்டு இருந்தேன்.
அதற்கு மேல் எங்களிடையே நடந்த உரையாடலை அப்படியே கொடுத்துள்ளேன்.
நான் : வர இருக்கும் சிங்கை பதிவர்கள் சந்திப்பு பத்தி பேசுனோம்.
குசும்பண் : ஏதும் திட்டம் தீட்டி தமிழை அடுத்த கட்டத்துக்கு நகர்த்த போறீங்களா?
நான் : அது எல்லாம், ரகசிய திட்டங்கள். இப்போதைக்கு எதையும் சொல்ல முடியாது.
குசும்பண் : அட இப்படி வேற இருக்கா?
நான் : ஹி, ஹி, ஹி
குசும்பண் : ஒரு வேளை குசும்பனை சிங்கபூர் வரவெச்சு விழா எடுக்கபோறீங்களோ?
தமிழை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த எதற்காக குசும்பணை சிங்கப்பூர் வரவழைத்து விழா எடுக்க வேண்டும்?
இப்படி ஒரு தப்பான நினைவில் இருக்கும் குசும்பணை , தமிழ் கூறும் நல்லுலகம் எங்கும் இருக்கும் தமிழ் வலை பதிவர்களும், வாசகர்களும் தங்களது கடுமையான கண்டணங்களை தெரிவித்து அவரை கண்டிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இந்த பதிவிற்கான காரணங்கள்:
1) ரொம்ப சீரியஸான பதிவர் என்று எனக்கு பட்டமளித்த அண்ணண் அப்துல்லாவின் கருத்தை உடைத்து, என்னால் மொக்கை பதிவும் எழுதமுடியும் எனக்காட்டுவது.
2) நானும், அண்ணண் கோவி.கண்ணணும் சந்திச்சதை வேற எப்படி எல்லார்கிட்டயும் சொல்லுறது ???
3) எல்லாரையும் குசும்பு பண்ணும் குசும்பணையே குசும்பு பண்ணுவது.
4) கடைசி முக்கிய காரணம் இன்னைய கணக்குக்கு ஒரு பதிவு எழுத ஒரு விசயமும் கிடைக்கல, அதான் இப்டி ஒரு மொக்கை....

என்னைய மதிச்சு வந்ததுக்கு ரொம்ப நன்றிங்க