கேரளாவில் சமீபத்தில் நீதிமன்ற ஆணை ஒன்று பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இருசக்கரவாகனக்களின் பின்னால் அமர்ந்து செல்லும் பெண்கள் சேலை அணிந்து செல்லக் கூடாதாம். சேலைத் தலைப்பு சக்கரத்தில் சிக்கி பல விபத்துகள் நிகழ்வதால் இந்த ஏற்பாடாம்!எனக்கொரு சந்தேகம். கேரளாவின் பெரும்பாலான கோயில்களில் சுடிதார் போன்ற உடைகளில் வர பெண்களுக்குத் தடையுண்டு. அப்ப, மனைவியை கூட்டிக்கொண்டு கோயிலுக்குப் போவதென்றால், சுடிதார் அணிந்து டூவிலரில் அழைத்துச் சென்று கோயிலுக்குள் செல்லும் முன் சேலை மாற்றி...
என்ன கொடுமை குருவாயூரப்பா இது?
மேற்கண்ட வரிகள் என் அன்புச் சகோதரர் பரிசல் அண்ணணின் பதிவில் இருந்தது.
ஆனால் இவர் என்னக் கொடுமை குருவாயூரப்பா எனக் கேட்பதைப் பார்த்தால் எங்கே கேரள அரசின் உத்தரவு தவறு என சொல்வாரோ எனச் சந்தேகமாக உள்ளது. முல்லைப் பெரியாறு, நெய்யாறு என தமிழகத்திற்கும் கேரளத்திற்குமிடையே உள்ள பல பிரச்சனைகளில் கேரளாவின் செயல்பாடுகளினால் எனக்கு அவர்கள் மீது கோபம் இருந்தாலும், இந்த உத்தரவை நான் மனமாற வரவேற்கிறேன். கோயில்களில் சுடிதாரை தடை செய்துள்ளார்கள் என்பதால் சேலை அணிந்துகொண்டு இரு சக்கர வாகனங்களின் பின்னால் அமர்ந்து செல்ல விதித்த தடையை மட்டும் நீக்க சொல்லாதீர்கள்.
நம்ம ஊர்ல ரொம்ப சவுகரியமா ஒரு பக்கமா உக்காந்துகிட்டு அதோட மடில ஒரு குழந்தை, இல்லன்னா நல்ல கனமான பை என இவங்க பயணம் செய்யிறத பார்த்தா ரொம்ப பயமா இருக்கும். அதுவும் நம்ம ஊர் சாலைகள் இருக்க அழகுல, நாம எல்லாம் சாலை விதிகள மதிக்குற அழகுல இப்படி எந்தவிதமான பாதுகாப்பும் இல்லாம பின்னாடி உக்காந்துகிட்டு போறது மிகவும் ஆபத்து.
சேலை அணிந்து இருசக்கரங்களின் வாகனங்களில் செல்லத் தடை விதித்தால் மட்டும் போதாது. சுடிதார் போன்ற உடைகளை அணிந்து கொண்டு, வாகனத்தின் இருப்புறமும் கால்களை இட்டு அமர்ந்துதான் செல்ல வேண்டும் என்று உத்தரவிட வேண்டும். இப்படி இவங்க பாதுகாப்பு இல்லாம இருசக்கர வாகனங்கள்ல பயணம் செய்ய கேரளாவில் மட்டும் தடை விதித்தா போதாது. இது நாடு முழுவதும் தடை செய்யப் படவேண்டும் என்பதே என் வேண்டுகோள்.
சேலையை விட சுடிதார் மிகவும் அருமையானது, பாதுகாப்பானது, அணிவதற்கும் எளிதானது எனப் பல சிறப்புகளை கொண்டது. ஏன் கோயில்களில் சுடிதாரை அனுமதிக்க கூடாது? கவர்சியான உடைகளை அணிந்து கொண்டு கோயிலுக்கு வந்தால் அனுமதிக்க மாட்டோம் என்றால் அதில் நியாயம் உள்ளது. ஆனால் சேலையை விட நாகரீகமான உடையான சுடிதாரை அணிந்துகொண்டு கூட உள்ளே வரக்கூடாது என சொல்வது எந்த விதத்தில் நியாயம் இருக்க முடியும்?
கவர்சியான உடைகளை அணிந்து கொண்டு கோயிலுக்கு வந்தால் அனுமதிக்க மாட்டோம் என்றால் அதில் நியாயம் உள்ளது. ஆனால் சேலையை விட நாகரீகமான உடையான சுடிதாரை அணிந்துகொண்டு கூட உள்ளே வரக்கூடாது என சொல்வது எந்த விதத்தில் நியாயமாக இருக்க முடியும்? உயிரோட பாதுகாப்பு முக்கியமா, சாமி முக்கியமா? எந்த சாமி சேலையிலத்தான் பொண்ணுங்க உள்ள வரணும்னு சொல்லியிருக்கு?
எல்லாரும் நல்லா இருக்கணும்னு தானே சாமியே கும்புட போறாங்க? அப்ப கட்டாயம் இந்த சட்டத்த எல்லா மாநிலங்களுக்கும் நீட்டிச்சு, கட்டாயமா கடைபிடிக்க செய்யிங்க.
சிங்கப்பூர்ல பெண்களாக இருந்தாலும், ஆண்களாக இருந்தாலும் இருபுறமும் கால்களை இட்டு அமர்ந்து தான் இருசக்கர வாகனங்களில் பயணிக்க இயலும். குழந்தைகளை முன்புறம் மட்டும் அல்ல, பின்னால் அமர்ந்திருப்பவர்கள் மடியில் கூட வைத்துக் கொள்ள முடியாது. இருவரும் கட்டாயம் தலைகவசம் அணிய வேண்டும். ஆனா நம்ம ஊர்ல ஒரு மொத்த குடும்பமும் ஒரு வண்டியில போறது எல்லாம் சர்வ சாதாரணம். இந்தியாவுல் ரொம்ப மலிவானது மனித உயிர்கள் தான். சில விசயங்களை மக்கள் தவறு எனத் தெரியாமலே செய்யும் போது அதை தடுக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை. இந்த சட்டமும் அதில் ஒன்றுதான்.
ஏற்கனவே கட்டாய தலைகவச சட்டத்த வீணாக்குனது மாதிரியில்லாம கொஞ்சம் மக்கள் மேல அக்கறையோட இந்த சட்டத்த கட்டாயம் கடைபிடிக்கச் செய்யணும் என வேண்டுகிறேன்.