•10:30 PM
எனது ஐம்பதாவது பதிவாக நான் எழுதிய சுந்தரி டீச்சர் எனும் பதிவை படித்தவர்களுக்கு என் 17 வருடத் தேடல் தெரிந்திருக்கும்.
இரண்டு வாரங்களுக்கு முன்னர் இந்தியப் பயணம் மேற்கொண்டிருந்த சிங்கையின் மூத்தப்பதிவர் கோவி.கண்ணண் அண்ணண் அவர்கள் தனது இப்பயணத்தின்போது நாகையில் அரும்பாடுபட்டு எனது மதிப்பிற்குறிய டீச்சரின் தற்போதைய இருப்பிடம், தொலைபேசி எண் ஆகியவற்றை கண்டறிந்து எனது 17 வருட தேடலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்து, என்னை அளவில்லாப் பேரின்பத்தில் ஆழ்த்திவிட்டார்.
டீச்சரின் தொலைபேசி எண் கிடைத்த உடனே தொடர்பு கொண்ட நான் என் ஊர் பெயரான மாரநேரியை சொல்லி முடிக்குமுன்னர் டீச்சர் யாரு பால்ராஜா, டைட்டஸா(என் அண்ணண்) என கேட்டது அதைவிட ஆனந்தம். டீச்சரும் எங்களை மறக்கவில்லை என அறிந்த போது மிக மிக மகிழ்சியடைந்தேன்.
அடுத்த முறை இந்தியப் பயணம் எப்போது செய்வேன், எப்போது என் டீச்சரை நேரில் சந்திப்பேன் என மிக ஆவலாய் உள்ளேன்.
தனது இந்தியப் பயணத்தில் இடைவிடாது பல இடங்களுக்கும் சென்று பல பதிவுலக நண்பர்களையும் சந்தித்து அளவில்லா மகிழ்சியில் ஆழ்த்திய கோவியார், இந்தப் பயணத்தின் வாயிலாக எனக்கு செய்துள்ள உதவி என் வாழ்நாளில் எந்நாளும் மறக்க இயலாது. நன்றி என்று சொல்லி அவரை அந்நியப்படுத்த விரும்பவில்லை.
அண்ணண் அப்துல்லா தனது பதிவில் வலையுலக உறவுகளைப் பற்றி சொல்லியிருந்த இந்த வாக்கியம் "எங்களுக்கெல்லாம் இது வெறும் வலை உறவு அல்ல! வாழ்க்கை உறவு!" எத்தனை சத்தியமான சொற்கள் இவை?