Author: ஜோசப் பால்ராஜ்
•4:21 PM
சிங்கையில் நேற்று நல்ல மழை, அந்த மழை நேரத்தில் தன் நண்பர் ஒருவருடன் இரு சக்கரவாகனத்தில் அமர்ந்து, வழக்கம் போல‌ அடுத்து என்ன பதிவு எழுதலாம் என்ற தீவிர யோசனையுடன் அண்ணண் கோவி.க அவர்கள் பயணிக்கையில் திடீரென்று வந்த ஒரு லாரியின் மீது மோதுவதை தவிர்க்க இருசக்கர வாகன ஓட்டி முயற்சித்த போது, தடுமாறியதால் இருவரும் கீழே விழுந்துவிட்டனர்.

அதில் கோவி.க அண்ணண் சிறுகாயங்களுக்குள்ளானார். இன்று மருத்துவ விடுப்பில் இருக்கிறார். ( இந்த காயத்துக்கு எல்லாம் ஒரு நாளைக்கு மேல மருத்துவ விடுப்பு கிடையாது, ஒழுங்கா நாளைக்கு வேலைக்கு போயிடணும்னு , மருத்துவர் சொல்லிட்டாராம்). கவலைப்படும் படி இல்லையென்றாலும், விபத்திற்குள்ளான நம் மூத்த பதிவர் சிங்கை சிங்கம் கோவி.கண்ணண் அவர்கள் விரைவில் குணமடைய உலகெங்கும் இருக்கும் தமிழ் பதிவர்கள் தனியாகவோ அல்லது கூட்டமாகவோ பிரார்தனை செய்யவும்.

மேலும் உலகெங்கும் இருக்கும் அன்பர்கள் எனக்கோ, தம்பி விஜய் ஆனந்துக்கோ PAYPAL ல் பணம் அனுப்பினால் பழம், ஹார்லிக்ஸ் போன்றவை உங்கள் பெயரில் வாங்கி அண்ணணுக்கு அனுப்பப்படும். PAYPAL சேவை இல்லாதவர்கள் பின்னூட்டத்தில் உங்கள் மின்னஞ்சல் முகவரியை தெரியப்படுத்துங்கள், எங்கள் வங்கிக்கணக்கு விவரங்களை அனுப்புகிறோம்.
குறிப்பு ஜெகதீசனுக்கு யாரும் பணம் அனுப்பிவிட வேண்டாம். அவரு ஹார்லிக்ஸ் வாங்குவாரு, ஆனா கோவி.க அண்ணணுக்கு குடுக்காம அப்டியே சாப்பிட்டுருவாரு.

ஆனால் இந்த சிறு விபத்தால் அண்ணண் பதிவெழுதும் வேகத்திற்கு எள் அளவுகூட சேதாரம் ஏற்படவில்லை என்பதால் ஒரு சில நாட்களுக்காவது அண்ணணின் பதிவுகளை பார்க்காமல் இருக்கலாம் என்று யாரும் நினைத்துக் கொள்ள வேண்டாம். வழக்கம் போல பதிவுகள் வரிசை கட்டி வந்துகிட்டேத்தான் இருக்கும்.

பின் குறிப்பு: என்னடா அவருக்கு அடிபட்டுருக்கு, இவன் அதை வெச்சு மொக்கை போடுறானேன்னு யாரும் திட்டாதீங்க. இந்த பதிவு அவரோட சம்மதத்தோடத்தான் வருது.

அடியின் அளவு ரொம்ப கம்மியா இருக்கதால யாரையும் கலவரப் படுத்திரவேண்டாம் என்ற எண்ணத்தால் தான் மொக்கையாக எழுதப்பட்டுள்ளது. ஆனால் சிறு விபத்தில் சிறு காயமடைந்தது உண்மை.

அண்ணண் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன். Udanz
This entry was posted on 4:21 PM and is filed under , . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

27 comments:

On Mon Sep 15, 04:42:00 PM GMT+8 , புதுகை.அப்துல்லா said...

அண்ணண் விரைவில் குணமடைய பிராத்திக்கிறேன்

 
On Mon Sep 15, 04:46:00 PM GMT+8 , ஜெகதீசன் said...

அண்ணண் விரைவில் குணமடைய வாழ்த்துக்கள்!!!

இதில் என் பெயரை இழுத்துள்ள நுன்னரசியலுக்கு கடும் கண்டனங்கள்!!!!!

 
On Mon Sep 15, 04:48:00 PM GMT+8 , கார்க்கிபவா said...

சிங்கம் சிங்கிளா போகனும்.. இவர் ஏன் அவரோடு போனார்? தல சீக்கிரம் குணமடைய எல்லாம் வல்ல ஜே.கே.ஆரை வணங்குகிறோம். ஹார்லிக்ஸ் மட்டுமல்ல எல்லவற்றிற்கும் ஜே.கே.ஆரிடம் இருந்து பணம் அனுப்புகிறோம். நீங்கள் அவரை சில நாட்களுக்கு பதிவெழுதாமல் பார்த்து கொள்ள் முடியுமா? தலைவரே உடல் நலம் சரியில்லாத போது அவர் படங்களை பார்க்க வேண்டாம் என கேட்டு கொன்டிருப்பதால் அவரை நாயகன் படத்தை பார்க்க விடாதீர்கள்.

 
On Mon Sep 15, 05:05:00 PM GMT+8 , Anonymous said...

Get well soon brother!!!
Renga

 
On Mon Sep 15, 05:16:00 PM GMT+8 , லக்கிலுக் said...

விபத்து குறித்த கருத்துக்களை கருத்து கந்தசாமியிடமிருந்து எதிர்ப்பார்க்கிறோம்! :-)

 
On Mon Sep 15, 05:42:00 PM GMT+8 , RATHNESH said...

ஏனோ இந்த கனமான செய்தியை மொக்கையாய் எதிர்கொள்ள என்னவோ போல் இருக்கிறது.

கோவி.கண்ணனுக்கு நல் வாழ்த்துக்கள்.

 
On Mon Sep 15, 05:46:00 PM GMT+8 , Anonymous said...

கோவி.கண்ணண் விரைவில் குணமடைய வாழ்த்துக்கள்.
-செல்வன்

 
On Mon Sep 15, 05:54:00 PM GMT+8 , narsim said...

கூடிய விரைவில் குணமடைய வேண்டுகிறேன்..

நர்சிம்

 
On Mon Sep 15, 06:40:00 PM GMT+8 , Kanchana Radhakrishnan said...

கோவியை உடனடியாக ஒரு அறிக்கை வெளியிட சொல்லுங்கள்.
மக்கள் வேதனையில் உள்ளனர்.
கோவி விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறோம்(!!!!)

 
On Mon Sep 15, 06:42:00 PM GMT+8 , விஜய் ஆனந்த் said...

:-)))...

ellorum gunamadaiya vaazhthu solraangale???? govi anna gunamadainju 10 mani neram aayidiche..innaikku medical leave-la okkaanthu 33 pathivugal ezhuthiyaachaam (vibatthu pathi verum naale naalu pathivuthaan..)..naalailernthu manikku onnaaga release pannappadum....

 
On Mon Sep 15, 07:50:00 PM GMT+8 , சின்னப் பையன் said...

அண்ணண் விரைவில் குணமடைய பிராத்திக்கிறேன்

 
On Mon Sep 15, 08:40:00 PM GMT+8 , கிரி said...

//விஜய் ஆனந்த் said...
:-)))...

ellorum gunamadaiya vaazhthu solraangale???? govi anna gunamadainju 10 mani neram aayidiche..innaikku medical leave-la okkaanthu 33 pathivugal ezhuthiyaachaam (vibatthu pathi verum naale naalu pathivuthaan..)..naalailernthu manikku onnaaga release pannappadum....//

:-))))))))))))))))))

 
On Mon Sep 15, 08:45:00 PM GMT+8 , சி தயாளன் said...

கோவி அண்ணையை (அவர் கொஞ்ச நாளா எழுதி வாற கருத்துக்களை)பிடிக்காதவர்கள் செஞ்ச சதி வேலையா இருக்குமோ என்று அஞ்சுகிறேன். இது சம்மந்தமாக உடனடியாக விசாரணைக் குழு அமைக்குமாறு சிங்கை, இந்திய, அமெரிக்க, ஜப்பான் மற்றும் பல இதர நாட்டு அரசாங்கங்களை கேட்டு கொள்கிறேன்...

 
On Mon Sep 15, 10:08:00 PM GMT+8 , கோவி.கண்ணன் said...

அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் நன்றி,

நேற்று மாலை 7 மணி அளவில் நண்பருடன் பைக்கில் சென்ற போது, மழையாக இருந்ததாலும், எதிர்பாரமல் குறுக்கே வந்த சிறிய லாரியை தவிர்க்க வண்டியை சிறிது வளைக்க, இருவரும் சாலையில் உருண்டோம், ஓட்டியவருக்கு வெளிக்காயம் கொஞ்சம் அதிகம் தான் தையல் போட வேண்டியதாயிற்று, எனக்கு ஐந்து இடங்களில் இடது கால் கட்டைவிரலுக்கு அருகிலும், வலது கால் முட்டியிலும் இரத்தம் கசியும் அளவுக்கு கொஞ்சம் சிராய்ப்புகள். விழுந்தாலும் 10 நிமிட ஓய்வுக்கு பிறகு எழுந்து அதன் பிறகு சென்ற வேலையை (பர்சேஸ்) முடித்துவிட்டு தான் வந்தோம் உள்காயம் எதுவும் இல்லை, பதட்டமும் ஆகவில்லை. லேசனா வீக்கம் இருந்தாலும் இன்று பரவாயில்லை, ஒருவாரத்தில் முற்றிலும் சரியாகிவிடும்.

 
On Mon Sep 15, 10:13:00 PM GMT+8 , கோவி.கண்ணன் said...

//ஆனால் இந்த சிறு விபத்தால் அண்ணண் பதிவெழுதும் வேகத்திற்கு எள் அளவுகூட சேதாரம் ஏற்படவில்லை//

உண்மைதான் கடைசியாக எழுதிய இருபதிவுகள் விபத்துக்கு பிறகு போட்டது தான்.

 
On Mon Sep 15, 10:28:00 PM GMT+8 , அத்திவெட்டி ஜோதிபாரதி said...

வணக்கம் ஜோசப் பால்ராஜ்,
இப்பதான் தெரியும்,
கோவியாரிடம் தொலைபேசியில் உரையாடி நலம் விசாரித்தேன்.
உடலில் சிராய்ப்புக் காயங்களுடன், மருத்துவ விடுப்பில் இருக்கிறார்.
விரைவில் குணமடைய எல்லாம் வல்லவனை அருள்தர தொழுகிறேன்.
"நம்புங்கள் நாராயணனை இந்தவாரம் இதுதான்!!!"

 
On Mon Sep 15, 10:33:00 PM GMT+8 , Unknown said...

விரைவில் நலம் பெற வாழ்த்துகள்..

 
On Mon Sep 15, 11:57:00 PM GMT+8 , Thamira said...

கோவி விரைவில் நலம் பெற வாழ்த்துகள்.

 
On Tue Sep 16, 12:26:00 AM GMT+8 , Anonymous said...

//சிறிய லாரியை தவிர்க்க வண்டியை சிறிது வளைக்க//

நல்ல காலம், லாரிக்கு ஏதும் ஆகிவிடவில்லை, .

கோவி.க ஒரு மலை, அவருக்கு ஒண்ணூம் ஆகாது.

 
On Tue Sep 16, 12:28:00 AM GMT+8 , Anonymous said...

//சென்ற வேலையை (பர்சேஸ்) முடித்துவிட்டு தான் வந்தோம் //

கோவியா கொக்கா?

 
On Tue Sep 16, 01:06:00 AM GMT+8 , Anonymous said...

நிஜமாகவே கோவியாருக்கு விபத்துதானா?

ஏன்னா லக்கிக்கு, "சிங்கப்பூர்ல ஒருத்தரு மாட்டியிருக்காரு. எப்புட்டு அடிச்சாலும் தாங்குவாரு.ஃப்ரியா இருந்தா வா மச்சான்" என போன் வந்ததாக சென்னையில் பரவலாக பேச்சு அடிபடுகிறது.

 
On Tue Sep 16, 11:54:00 AM GMT+8 , மோகன் கந்தசாமி said...

///எதிர்பாரமல் குறுக்கே வந்த சிறிய லாரியை தவிர்க்க வண்டியை சிறிது வளைக்க,////

என்னங்க இது லாரி அது இது -ன்னு பயமுறுத்தறிங்க!

கோவியாரும் அவர் நண்பரும் நலம் பெற வாழ்த்துக்கள்

 
On Tue Sep 16, 01:11:00 PM GMT+8 , சரவணகுமரன் said...

விரைவில் குணமடைய வேண்டுகிறேன்

 
On Tue Sep 16, 01:23:00 PM GMT+8 , VIKNESHWARAN ADAKKALAM said...

அண்ணண் விரைவில் குணமடைய பிராத்திக்கிறேன்

 
On Tue Sep 16, 01:59:00 PM GMT+8 , பரிசல்காரன் said...

லாரிக்கு என்ன ஆச்சு?

:-)

நான் ஊரில் இல்லை. இன்றுதான் படித்தேன். கண்ணன் ஜி, நலம் தானே?

 
On Tue Sep 16, 08:48:00 PM GMT+8 , Anonymous said...

விரைவில் சுகமடைய பிரார்த்திக்கின்றேன்..

 
On Tue Sep 16, 08:57:00 PM GMT+8 , ஜோசப் பால்ராஜ் said...

அண்ணண் மேல் இவ்வளவு தான் உங்கள் அனைவருக்கும் பாசமா நண்பர்களே, எல்லாரும் வெறுமனே பிரார்தனைகளை மட்டும் சொல்லிவிட்டு போய்விட்டீர்களே, யாருமே அண்ணணுக்கு பழம் வாங்கவும், ஹார்லிக்ஸ் வாங்கவும் பணம் அனுப்பவேயில்லையே ஏன்? இவ்வளவு தான் அண்ணண் மேல் உள்ள பாசமா?

 
என்னைய மதிச்சு வந்ததுக்கு ரொம்ப நன்றிங்க