•9:55 PM
நம் தமிழ்நாட்டில் உள்ள சில நல்ல அதிகாரிகளில் உமாசங்கர் IAS அவர்களும் ஒருவர். தற்போது எல்காட் நிர்வாக அதிகாரியாக சென்னைக்கு வெளியே தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களை அழைத்துச்செல்லும் முழுமுயற்சியில் திருச்சி, மதுரை, நெல்லை, கோவை போன்ற பெருநகரங்களிலும் தகவல் தொழில்நுட்ப பூங்காக்களை அமைப்பதில் கவனம் செலுத்திக்கொண்டிருக்கும் அதே நேரத்தில் மாணவர்களுக்காக சலுகை விலையில் மடிக்கணிணிகளை( Laptop ) வாங்கித்தருவதிலும் ஆர்வமாய் செயல்பட்டுக்கொண்டிருக்கும் இவரைப்பற்றிய ஒரு சுவரஸ்யமான செய்திதான் இந்த பதிவு.
மாணவர்களுக்கு சலுகை விலையில் தரப்படும் மடிகணிணிகளை பற்றி ஒரு மின்னஞ்சல் எனக்கு நேற்று ஒரு நண்பரிடமிருந்து வந்தது. இதை தொடர்ந்து எல்காட் இணையதளத்தில் இது குறித்த விவரங்களை அறிந்துகொள்ள சென்ற நான், அப்படியே அந்த இணைய தளத்தில் இருக்கும் விவரங்களை பார்வையிட்டுக்கொண்டிருந்த போது, ஒரு சிறு எழுத்து பிழையை காணநேர்ந்தது. உடனே அதை snagit வழியாக screen shot எடுத்து ,திரு.உமாசங்கர் அவர்களுக்கு மின்னஞ்சல் செய்தேன்.

உடனடியாக அதை சரிசெய்யும்படி பணித்துவிட்டு எனக்கும் அதை தெரிவித்திருந்தார். இன்று அந்த தவறு சரிசெய்யப்பட்டுவிட்டதெனவும் எனக்கு தெரிவிக்கப்பட்டிருந்தது.

இது பெரிய விஷயமா என தோணலாம். ஒரு மாநில அளவிலான துறையின் நிர்வாக இயக்குநராக பல திட்டங்களை செயல்படுத்தும் நிலையிலும், எனது மின்னஞ்சலுக்கு மதிப்பளித்து அதை உடனே சரி செய்தது மிக்க மகிழ்ச்சியை அளித்தது.
1996 - 2001 கலைஞர் ஆட்சியில் திருவாரூர் தனி மாவட்டமாக்கப்பட்டு, அங்கு மின் ஆளுமை ( e-governance) சோதனை முயற்சியாக செயல்படுத்தப்பட்ட போது அங்கு ஆட்சித்தலைவராக இருந்து அப்பணிகளை திறம்பட செய்தவர். இவரது சீரிய தலைமையில் தமிழகத்தில் தகவல் தொழில்நுட்பம் மென்மேலும் வளரவேண்டும்.