•12:29 AM
மீண்டும் ஒரு எதிர்பதிவு, இம்முறை என் அன்பிற்குறிய அண்ணண் கோவியாரின் பதிவுக்கு எதிர்பதிவு எழுத வேண்டிய நிர்பந்தம் எழுந்துவிட்டது. காரணம் அவர் எழுதிய "பிரபல" பதிவர்கள் - இது அன்பால சேர்ந்த கூட்டம் :) என்ற பதிவு தான் காரணம்.
கோவி.க அண்ணே என்னாச்சு உங்களுக்கு?
இன்னைக்குத்தான் இந்தப் பதிவ படிச்சேன், இப்டி ஒரு மெகா மொக்கைப் பதிவு தேவையா?
பிரபலப் பதிவராயிருந்தா என்ன, பிரபலமில்லாமல் இருந்தா என்ன? ஏன் இந்த தேவையற்ற அளவுகோல்கள்? இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.
இப்படிப்பட்ட அளவுகோல்களை கொண்டு நான் பிரபலங்களை தீர்மானிக்க விரும்பவில்லை. மேலும் சூடான இடுகைகளையும் நான் நம்புவதில்லை. அதிக பேர் படித்தபின்னர் தானே சூடாண இடுகையில் வருகிறது? படித்தவர்கள் அத்தணை பேரும் அது சிறந்த பதிவு என கருதினார்கள் என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது? நீங்கள் சொல்லியது போல் அன்பினால் சேர்ந்த கூட்டம் நீங்கள் என்ன எழுதியிருக்கின்றீர்கள் என்ற ஆவலில் படித்து விட்டு ச்சே என்னாச்சு கோவியாருக்கு, இப்டியெல்லாம் மோசமா எழுதியிருக்காரேன்னு புலம்பிக்கிட்டு கூட போயிருக்கலாம் இல்லையா? இது உங்களுக்கு மட்டுமல்ல, சூடாண இடுகைகள்ல வர்ற பதிவுகளை எழுதும் எல்லாருக்குமே பொருந்தும். நான் கூட சூடாண இடுகைகள்ல வர்ற பல பதிவுகளை படிச்சுட்டு அடக்கெரகமேன்னு தலையில அடிச்சுக்கிட்டு போயிருக்கேன்.
உதாரணங்கள் நிறைய கொடுக்கிற அளவுக்கு தலைப்புகளும், எழுதுனவங்களும் நினைவுல இருந்தாலும், அவர்கள் மனதை புண்படுத்தும் விதமாக அவற்றை இங்கே குறிப்பிட விரும்பவில்லை.
பிரபலம் என்பதால் எந்த கிரீடமும் வந்துவிடுவதில்லை, பணம் அல்லது வேறு ஏதாவது பலன்களும் வரப் போவதில்லை. பின் ஏன் இந்த அளவுகோல்கள்? அதற்கு நீங்கள் ஒரு பதிவு எழுத வேண்டும்? இந்த அளவுகோல்களும், மதிப்பீடுகளும் வெறும் மொக்கைப் பதிவுகளுக்காக எழுதப்பட்டிருந்தால் கூட தேவையற்ற ஒன்று என்பது என் கருத்து.
2009 ஆம் ஆண்டின் முதல் எதிர்பதிவை எழுதிய துர்பாக்கியத்திற்காக வருந்துகிறேன்.

கோடைக்காலம் வந்தாலே எங்க ஊரு வயலுக்கு எல்லாம் ஆட்டுக்கிடை ( ஆட்டு உரம்) வைப்பதற்காக இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த கீதாரிங்க ஆட்டு மந்தைய ஓட்டிக்கிட்டு வந்துருவாங்க.ஒரே சமயத்துல நிறைய கீதாரிங்க குடும்பத்தோட ஆடுகள் ஓட்டிக்கிட்டு வந்துருவாங்க. செம்மறியாடுங்க எல்லாம் கூட்டம் கூட்டமா போறத பாக்குறதே அழகா இருக்கும். வெளி ஆளுங்கள பார்த்தா இதுங்க வெறிச்சுக்கும், தாண்டி ஓடிடும். சின்ன பசங்க இருக்க வீடுகள்ல எல்லாம் கீதரிங்ககிட்ட போய் ஒரு குட்டி ஆடு வாங்கிட்டு வந்து வளர்ப்பாங்க. வருசா வருசம் நாங்களும் ஒன்னு வாங்கிடுவோம்.
வீட்டில் இருக்கும் வெள்ளாடுகளுடன் சேர்த்து வளர்காமல் இதை தனியாகத்தான் கட்டி வைப்போம். வெள்ளாடுகள் இவற்றை முட்டிவிடும். இவை கோடைகாலங்களில் மட்டும் எங்கள் ஊர்களுக்கு வருவதற்கு காரணம், மற்ற காலங்களில் எங்கள் ஊர்களில் எல்லாம் விவசாயம் நடைபெறும், இவை வயல்களில் உள்ள பயிர்களை மேய்ந்துவிடும் என்பதால் கோடைகாலங்களில் மட்டுமே கொண்டுவருவார்கள்.
செம்மறியாடுகள் இலைகள், தழைகள், கடலை புண்ணாக்கு போன்றவற்றை சாப்பிட்டாலும் விரும்பி உண்பது கருவக்காய் எனப்படும் வேலிக்கருவை மரத்தின் முற்றிய காய்களைத்தான். நீளமான குச்சியின் நுணியில் அருவாளை கட்டி ( இதை அலக்கு என்பார்கள்) அதை கையில் எடுத்துக் கொண்டு ஆட்டை அழைத்துக் கொண்டு வயல் வெளிகளில் பாதையோரமாக இருக்கும் கருவை மரங்களிலிருந்து காய்களை உலுக்கி கொடுப்போம், ஆடுகள் பிரியமாக சாப்பிடும். அப்படி கருவக்காய் பறிக்க எடுத்துப் போகும் அலக்கை வைத்து அப்படியே மாங்காய், புளியம்பழம் எல்லாம் அடிச்சு நாங்க சாப்பிடுறதும் உண்டு.இப்போது நினைத்தால் கொடூரமாக இருக்கிறது. ஒரு ஆட்டுக்கு சாப்பாடு கொடுக்க போய் நாம எத்தனை மாங்காய் சாப்பிட்ருக்கோம்.
காலையில பொறுமையா எழுந்திருச்சு, நாங்க ஆட்டுக்குட்டியை கூட்டிக்கிட்டு கிளம்பிருவோம். வீட்டுக்கு வந்த ரெண்டு நாள்லயே நம்மளோட நல்லா பழகிடும், எங்க போனாலும் பின்னாடியே வரும். ஊர்ல இருக்க ஆத்துல போயி குளியலுங்கிறப்பேருல ஒரு ஆட்டம் ஆடிட்டு வருவோம். எங்களோட சேர்ந்து ஆடும் குளிக்கும். அப்பறம் வீட்டுலப் போயி சாப்பிட்டுட்டு அப்படியே ஆட்ட கூட்டிக்கிட்டு தோட்டத்துக்குப் போயி அதுக்கு இலை வெட்டிப்போட்டுட்டு நாங்களும் விளையாண்டுட்டு வருவோம்.
மத்தியானம் சாப்பிட வீட்டுக்கு வரும்போது வீட்டுக்கு பின்னாடி இருக்க தொழுவத்துல எங்க ஆட்டுக்குட்டியை கட்டிருவோம். எங்க ஊர்ல இருக்க எல்லா வீட்லயும் சாதாரணமா வீட்டுக்குப் பின்னாடி மாடு, ஆடு எல்லாம் கட்டி வைக்க தொழுவம் இருக்கும். அங்க ஆட்டுக்குன்னு தனியா இடம் ஒதுக்கி அங்க கட்டிருவோம். ஆட்டுக்குட்டிக்கு பெயர் எல்லாம் வைச்சு கூப்டுவோம். அதுகளும் தன்னைதான் கூப்பிடுறான்னு தெரிஞ்சு உடனே ஓடியாந்துரும். பச்சப்புள்ளைங்கங்க மாதிரி பழகும், விளையாடும்.
மாலை நேரத்துல பசங்க கூட விளையாடிட்டு அப்டியே ஆத்துல போயி இன்னொருக்கா குளிச்சுட்டு வருவோம். அப்ப எல்லாம் எல்லாருக்கும் ஆட்டுக்குட்டியை பற்றிய நினைப்புதான் மூளையில நிறைஞ்சுருக்கும். எல்லாரும் அவன் அவன் ஆட்டுக்குட்டியப்பத்தி பெருமை பேசிக்குவோம்.
“ நான் என்ன சொல்றனோ அதத் தாண்டா என் ஆடு கேக்கும்.. நான் கூப்டா வரும்.. எங்க அப்பா கூப்ட்டா கூட வரவே வராது..” என்பான் ஒருவன்.
“ டே... அதாவது பரவால்லடா.. எங்க ஆடு கருவக்காய பறிச்சு கீழ போட்டா தின்னாதுடா.. என் கைல வச்சா தான் நல்லா தின்னும்.. அதுக்கு என்னா கொழுப்பு பாத்தியாடா” என்பான் இன்னொருவன் பெருமையாக..
இப்படி ஏராளமான பேச்சுகள் அந்த செம்மறி ஆட்டுக்குட்டிகளை வைத்து பேசப் படும். பின் குளித்து முடிந்தவுடன் ஆடுகளை அழைத்துக் கொண்டு கிளம்பி விடுவோம். மாலை நேரத்தில் அவ்வளவாக கருவக்காய்கள் கிடைக்காது. காலையிலேயே பறித்துவிட்டது அல்லது இருள் காரணமாக இருக்கலாம்.. ஆனாலும் எங்கள் ஆடுகளுடன் வெளியே சுத்துவது எங்களுக்கு பெருமை... இதில் வேடிக்கை என்னன்னா.. யாருமே ஆடுகளின் முழு ஆயுளுக்கு அவற்றை வளர்த்ததில்லை.. திருவிழாக்களில் வெட்டப்படுவதில் இருந்து காப்பது அவ்வளவு சிரமம். அதில் தப்பினாலும் இருக்கவே இருக்கு அரிசிப்பானை. எப்படி தான் கண்டுபிடிக்குமோ.. நாம் கொஞ்சம் அசந்தாலும் போதும்.. ஆட்டுக்குட்டி வீட்டினுள் நுழைந்து அரிசியை தின்றுவிடும், அரிசியை தின்னுடுச்சுன்னா அவ்ளோதான் ஆடு காலி, அதுக்கு முன்னாடியே அறுத்துருவாங்க. அப்படியே அவைகளிடம் தப்பி வளர்த்தாலும் கொஞ்ச்ம பெரிசானவுடன் குழம்பாகவும், உப்புகண்டமாகவும் ஆகிவிடும்.
உப்புக்கண்டம் என்பது ஆட்டின் கறியுடன் மசாலா எல்லாம் சேர்த்து, வெயிலில் கருவாடு போல் காயவைத்து எடுத்து வைத்துக் கொள்வது. இதை வறுத்து அல்லது குழம்பில் போட்டு சாப்பிடலாம்.
இப்படி ஏடாகூடமா ஏதாச்சும் ஆகி ஆடு குழம்பாகிடுச்சுன்னா எங்களால பெருமையா எல்லாம் பேசிக்கிட்டு திரிய முடியாது. மனசு ரொம்ப சோகமாகிடும். இவன் தான் அந்த ஆட்டுக்குட்டிய கஷ்டப்பட்டு வளர்த்தான் இவனுக்கு கொஞ்சம் அதிகமா கறிய வைன்னு சொல்லி குடுத்தாலும் நமக்கு சாப்பிடவே மனசு வராது. நாங்க என்ன எங்க ஆட்டுல எலும்பே இல்லன்னா சொல்லிக்க முடியும்? நாங்க சோகமா திரியிறதப் பார்த்துட்டு முதல்ல பெரியவங்க எல்லாம் சரிடா விடுங்க, அடுத்த வருசம் நல்ல ஆட்டுக்குட்டியா வாங்கிக்கலாம்னு சமாதானப்படுத்துவாங்க. அதையும் மீறி சோகமா இருந்தா அப்புறம் இனிமே எனக்கு ஆட்டுக்குட்டி வேணும்னு கேளு, அப்பறம் இருக்கு பூசன்னு மிரட்டிருவாங்க.
அவங்க சொல்ற சமதானத்த ஏத்துக்கிட்டோ அல்லது மிரட்டலுக்கு பயந்தோ நாங்களும் எல்லாத்தையும் மறந்துட்டு அடுத்தவருசத்து ஆட்டுக்குட்டிக்காக காத்திருப்போம்.
டிஸ்கி: இது என் பால்ய கால நினைவுகளின் பதிவு தான். இதுக்கும் எதிர்பதிவு ஏகம்பரம் பொடியன் சஞ்சயோட கலர் கோழிக்குஞ்சு பதிவுக்கும் எந்த சம்பந்தமுமில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

என்னைய மதிச்சு வந்ததுக்கு ரொம்ப நன்றிங்க