Author: ஜோசப் பால்ராஜ்
•10:29 PM
ஆபரேஷன் கமலா ( பெயரெல்லாம் நல்லாத்தான் வைக்கிறாய்ங்க). இந்த பெயர படிச்சுட்டு ஏதோ தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைக்கோ, அல்லது ஏதாவது ஒரு முக்கிய நடவடிக்கைக்கோ இப்டி ஒரு பெயர வைச்சு ஏதோ நம்ம ராணுவம் சாதிச்சுருக்கும்னு நினைச்சா நம்மள விட கேணயன் வேற எவனும் இருக்க மாட்டான்.

தேவகவுடா செஞ்ச கூட்டணித் துரோகத்துனால முதல்வர் நாற்காலியில ஏறுன வேகத்துல இறங்குன எடியூரப்பா, சம்பந்தமேயில்லாம தமிழக எல்லையில இருக்க ஹோகேனக்கல்ல வந்து பிரச்சனைய எல்லாம் கிளப்பி ஓட்டுக்காக அரசியல் செஞ்சு தேர்தல சந்திச்சும், தனி பெரும்பான்மைக்கு 3 இடங்கள் குறைவாகத்தான் அவங்களால ஜெயிக்க முடிஞ்சது எல்லாருக்கும் தெரியும். அத சரி பண்ண அடிச்சாங்க பாருங்க ஜனநாயகத்து மேல ஓங்கி ஒரு அடி, அதுக்குப் பெயர் தான் ஆபரேஷன் கமலா.

அதன்படி இவங்க மொத்தம் 8 எதிர்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள விலைக்கு வாங்கிட்டாங்க. ஆனா கட்சித் தாவல் தடை சட்டம் பாய்ஞ்சுரும்ல? இதனால கட்சி தாவுன பாசக்காரங்கள எல்லாம் அவங்க சட்டமன்ற உறுப்பினர் பதவியில இருந்து விலகச் சொல்லி, அவங்கள தங்களோட கட்சியில உறுப்பினராக்கி, இடைத்தேர்தல்ல திரும்பவும் அவங்களையே நிக்க வைச்சு 8ல 5 சீட்டுல பாரதிய சனதா கட்சிகாரங்க வெற்றியடைஞ்சு சட்ட சபையில தனிப் பெரும்பான்மைய வாங்கிட்டாங்க. அதுக்கு தான் ஆபரேஷன் கமலா.

நாட்டுல நாங்க மட்டும்தான் யோக்கியம், மத்தவங்க எல்லாம் அயோக்கியர்கள்னு சொன்ன கட்சி, நாடாளுமன்றத்துலயே கோடிக்கணக்குல பணத்த கொட்டி எங்கள விலைக்கு வாங்கப் பார்த்தாங்கன்னு எல்லாம் அழுகாச்சி ஆட்டம் ஆடுன கட்சி தன் ஆட்சிய காப்பாத்திக்க என்னமா ஜனநாயகத்துக்கு மரியாதை கொடுத்துருக்காங்க பாருங்க மக்களே. ஊர்ல ஒரு பழமொழி சொல்லுவாய்ங்க நாட்டாமை வர்றாரு சொம்பத் தூக்கி உள்ள வையின்னு. இவங்களுக்கு தனிப் பெரும்பான்மை கிடைக்க இவங்க கட்சியில இருந்து எங்க எங்கயோ கொள்ளையடிச்ச பணத்த எதிர்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கொடுக்குறது எல்லாம் சரி, ஆனா இந்த இடைத்தேர்தல் என்ன இவங்க கட்சி செலவுலயா நடந்துச்சு? அது யாரு ஊட்டு பணம்? நம்ம வரியா குடுக்குற பணம் தானே?

இன்னைக்கு ஒரு சாதாரன குடிமகன் கையில கூட அலைபேசி இருக்கு. அதுக்கு அவன் செலுத்துற காசுல 12% வரி, ஒரு லிட்டர் பெட்ரோலோட அடக்க விலை 11 ரூபாய்தானாம். ஆனா விக்கிற விலை 48 முதல் 55 ரூபாய் வரை. மிச்ச காசு எல்லாம் என்ன? நாம மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் கொடுக்குற வரி தானே? அதுல இருந்து தானே இந்த இடைத் தேர்தல் முதுகுத் தேர்தல் எல்லாம் நடக்குது? ஆக முனுசாமி டிவிஸ் 50க்கு ஒரு லிட்டர் பெட்ரோல் போட்டா அதுல தர்ற வரி, குப்புசாமி 300 ரூபாய்க்கு தன்னோட அலைபேசிக்கு கட்டணம் செலுத்துனா அதுல வர்ற 36 ரூபாய் வரி இதெல்லாம் எங்க போவுது பாருங்க. இவுங்களோட ஆபரேஷன் கமலாவுக்கு நாம தெண்டம் அழுவ வேண்டியிருக்கு.

ஏற்கனவே தரம்சிங் தலைமையில அமைந்திருந்த காங்கிரஸ் - மத சார்பற்ற ஜனதா தள கூட்டணி அரசை கலைத்து குமாரசாமி தலைமையில ஆட்சி அமைக்க வைச்ச பாஜகவுக்கு கூட்டணி தர்மத்தை பத்தி பேச அருகதையே இல்லையில்லைன்னு தெரிஞ்சதுனாலத்தான் எடையூரப்பா ஹோகேனக்கல் பிரச்சனைய ஆரம்பிச்சு ஓட்டுப் பொறுக்கும் அரசியல ஆரம்பிச்சாரோ?

இம்புட்டு நல்ல பாரதிய சனதா கட்சியோட டெல்லி தலைமை அலுவலகத்துல அவங்க பாதுகாப்பு பெட்டகத்துல வைச்சுருந்த 2.6 கோடிய அவுங்க ஆளுங்கள்லயே யாரோ ஆட்டையப் போட்டுட்டாங்களாம். யோக்கியவானுங்க காவல்துறையில கூட புகார் குடுக்காம தனியார் துப்பறியும் நிறுவனங்க வைச்சும், ஜோசியம், வாஸ்து எல்லாம் பார்த்து அந்த சொம்ப தூக்குன நாட்டமைய கண்டுபிடிக்கப் போறாங்களாம். என்னக் கொடுமை சார் இது?

இலங்கை அரசாங்கம் செய்யிறது எல்லாம் அநியாயம்னாலும், அங்க எனக்கு புடிச்ச ஒரே ஒரு விசயம் அங்க இடைத்தேர்தல்னு ஒன்னு கிடையவே கிடையாது. எத்தன தடவ எதிர்கட்சி ஆளுங்கள கொன்னாலும், அந்த காலி ஆகிற இடத்துக்கு பொதுத் தேர்தல்ல எந்த கட்சி வெற்றி பெற்றுச்சோ அதே கட்சிதான் வேற ஒரு உறுப்பினர நியமிக்குமேத் தவிர இடைத் தேர்தல், முதுகுத் தேர்தல் எல்லாம் அங்க கிடையாது. இடைத் தேர்தல்னு ஒன்ன வைச்சுக்கிட்டு நாம படுற பாடு இருக்கே, அதப் பத்தி நான் வேற சொல்லணுமா? முடிஞ்சா திருமங்கலம் தொகுதிகாரங்கள கேட்டுத் தெரிஞ்சுகங்க.

இப்டியெல்லாம் ஜனநாயகப் படுகொலைகள் நடக்கிறத தடுக்க இடைத்தேர்தல முதல்ல ஒழிக்கணும். மதிமுக வெற்றி பெற்ற திருமங்கலம் தொகுதியில இடைத்தேர்தல்ல தன்மான சிங்கம் வைகோகிட்ட கேட்காமலேயே புரட்சித் தலைவி தன் கட்சி வேட்பாளரை நிறுத்துறது, தமிழகத்து ஆளுங்கட்சியும், எதிர்கட்சியும் இவுங்க இங்க பணம் கொடுத்தாங்க, அவுங்க அங்க பணம் கொடுத்தாங்கன்னு புகார் கொடுக்குறது, இருக்க வேலையெல்லாம் பத்தாதுன்னு இந்த இடைத் தேர்தலுக்கு பாதுகாப்பு வேலையின்னு நம்ம துணை ராணுவம் வர்றது, இருக்க அமைச்சர் எல்லாம் தன்னோட வேலையெல்லாம் விட்டுட்டு பிரச்சாரம் செய்யிறது, முதல்வர் வரைக்கும் போயி பிரச்சாரம் செய்யிறது இப்டி ஆயிரத்தெட்டு தொல்லைகளையும், அநாவசியச் செலவுகளையும் தடுக்க முதலில் இந்த இடைத் தேர்தல்களை ஒழிக்க வேண்டும்.

ஆனா ஒன்னு நாங்க மட்டும் தான் யோக்கியமானவனுங்கன்னு சொல்லிக்க இங்க எந்த கட்சிக்கும் அருகதையில்ல. எல்லாரும் ஒரே குட்டையில ஊறுன மட்டைங்கந்தான். அப்ப தேர்தல்ல நாமெல்லாம் ஓட்டுப் போடணுமா, போடாம விட்டா தப்புன்னு சொல்றாங்களேன்னு கேட்குறீங்களா? கட்டாயம் ஓட்டுரிமை இருக்கவங்க எல்லாம் ஓட்டு போடணும். உங்க உரிமைய விட்டுக் கொடுக்க கூடாது. 49 ஓ இருந்தா அதுல போடுங்க. இல்லன்னா இருக்கதுல நல்லவரு யாருன்னு பார்த்து ஓட்டுப் போடுங்க. ஏன்னா இன்னையத் தேர்தல் “ Choosing the best among the worst".

பின் குறிப்பு: எங்க அநியாயம் நடந்தாலும் தாண்டிக் குதிச்சு தட்டிக்கேட்கின்ற பத்திரிக்கையாளர் சோ இந்த ஆபரேஷன் கமலா பத்தி ஏதாச்சும் எழுதுனாரான்னு துக்ளக் படிக்கிறவங்க முடிஞ்சா பின்னூட்டமிடுங்க. அப்டி அவரு வேலைப்பளுவால எழுதாம விட்ருந்தா அவருக்குப் பதிலா டோண்டு சார் ஆச்சும் பதில் சொல்லுவார் என நம்புவோம். Udanz
Links to this post
Author: ஜோசப் பால்ராஜ்
•5:35 PM
மீண்டும் ஒரு எதிர்பதிவு, இம்முறை என் அன்பிற்குறிய அண்ணண் கோவியாரின் பதிவுக்கு எதிர்பதிவு எழுத வேண்டிய நிர்பந்தம் எழுந்துவிட்டது. காரணம் அவர் எழுதிய "பிரபல" பதிவர்கள் - இது அன்பால சேர்ந்த கூட்டம் :) என்ற பதிவு தான் காரணம்.

கோவி.க அண்ணே என்னாச்சு உங்களுக்கு?
இன்னைக்குத்தான் இந்தப் பதிவ படிச்சேன், இப்டி ஒரு மெகா மொக்கைப் பதிவு தேவையா?
பிரபலப் பதிவராயிருந்தா என்ன, பிரபலமில்லாமல் இருந்தா என்ன? ஏன் இந்த தேவையற்ற அளவுகோல்கள்? இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

இப்படிப்பட்ட அளவுகோல்களை கொண்டு நான் பிரபலங்களை தீர்மானிக்க விரும்பவில்லை. மேலும் சூடான இடுகைகளையும் நான் நம்புவதில்லை. அதிக பேர் படித்தபின்னர் தானே சூடாண இடுகையில் வருகிறது? படித்தவர்கள் அத்தணை பேரும் அது சிறந்த பதிவு என கருதினார்கள் என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது? நீங்கள் சொல்லியது போல் அன்பினால் சேர்ந்த கூட்டம் நீங்கள் என்ன எழுதியிருக்கின்றீர்கள் என்ற ஆவலில் படித்து விட்டு ச்சே என்னாச்சு கோவியாருக்கு, இப்டியெல்லாம் மோசமா எழுதியிருக்காரேன்னு புலம்பிக்கிட்டு கூட போயிருக்கலாம் இல்லையா? இது உங்களுக்கு மட்டுமல்ல, சூடாண இடுகைகள்ல வர்ற பதிவுகளை எழுதும் எல்லாருக்குமே பொருந்தும். நான் கூட சூடாண இடுகைகள்ல வர்ற பல பதிவுகளை படிச்சுட்டு அடக்கெரகமேன்னு தலையில அடிச்சுக்கிட்டு போயிருக்கேன்.

உதாரணங்கள் நிறைய கொடுக்கிற அளவுக்கு தலைப்புகளும், எழுதுனவங்களும் நினைவுல இருந்தாலும், அவர்கள் மனதை புண்படுத்தும் விதமாக அவற்றை இங்கே குறிப்பிட விரும்பவில்லை.

பிரபலம் என்பதால் எந்த கிரீடமும் வந்துவிடுவதில்லை, பணம் அல்லது வேறு ஏதாவது பலன்களும் வரப் போவதில்லை. பின் ஏன் இந்த அளவுகோல்கள்? அதற்கு நீங்கள் ஒரு பதிவு எழுத வேண்டும்? இந்த அளவுகோல்களும், மதிப்பீடுகளும் வெறும் மொக்கைப் பதிவுகளுக்காக எழுதப்பட்டிருந்தால் கூட தேவையற்ற ஒன்று என்பது என் கருத்து.

2009 ஆம் ஆண்டின் முதல் எதிர்பதிவை எழுதிய துர்பாக்கியத்திற்காக வருந்துகிறேன். Udanz
Links to this post
Author: ஜோசப் பால்ராஜ்
•1:36 AM
என் அன்புக்குறியவர்கள் அனைவருக்கும் மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்

பிறந்துள்ள இவ்வாண்டு எல்லா வளங்களையும் எல்லாருக்கும் அளிக்கட்டும்.

தீவிரவாதமும், ஜாதி, மத மோதல்களும் இல்லாத ஆண்டாய் அமையட்டும்.

உலகமே பெரும் பொருளாதார நெருக்கடியை சந்தித்துக்கொண்டிருப்பதால் இவ்வாண்டு எல்லாருமே மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டிய சூழல் நிலவுகின்றது. பணியில் நமது இருப்பை உறுதி செய்ய நம் திறமைகளை மேலும் மேலும் வளர்த்துக் கொண்டு, பன் முகத் திறன் உள்ளவர்களாய் இருக்க வேண்டும். எனவே மேலும் மேலும் புதுத் திறமைகளை வளர்த்துக் கொண்டு நம்மை மெருகேற்றிக் கொள்ள இவ்வாண்டில் முயற்சிகளை மேற்கொள்வோம்.

பதிவுலகில் எந்த பதிவரசியலும், அநாகரீகமான தாக்குதல்களும் இல்லாத ஆண்டாகவும்,கடந்த கால தவறுகளை திருத்திக் கொள்ளும் ஆண்டாகவும் இவ்வாண்டு அமைய வேண்டும் என வாழ்த்துகிறேன்.

பணிச்சுமைகளால் தொடந்து எழுத முடியாது மிக நீண்ட இடைவெளியை விட்டிருந்த நான் இவ்வாண்டில் தொடர்ந்து எழுத முயற்சிக்கிறேன். ஊக்கமளித்தவர்களுக்கும், தொடர்ந்து விசாரித்துக் கொண்டிருந்தவர்களும் என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். Udanz
Links to this post
என்னைய மதிச்சு வந்ததுக்கு ரொம்ப நன்றிங்க