Author: ஜோசப் பால்ராஜ்
•9:15 PM
என் அன்பிற்குறிய சக பதிவர்களுக்கும், வாசகர்களுக்கும், இணைய நட்புகளுக்கும் வணக்கம்.

பல ஆண்டுகளாய் பதிவுலகில் இருந்து, சில பதிவுகளையும் எழுதியுள்ள நான் கடந்த 2 ஆண்டுகளாய் தொடர்ந்து எழுத இயலாமல் போய்விட்டது. எழுதினாலும் எழுதாவிட்டாலும், என் எண்ணமும், சிந்தனையும், செயலும் இந்தப் பதிவுலகத்தை எப்படி அடுத்த கட்டத்திற்கு நகர்திச்செல்வது என்பதிலேயே இருந்து வந்தது.

பல ஆண்டுகளாய் சிந்தித்ததின் விளைவாக, என்னைப் போலவே தற்போது தீவிரமாய் எழுதாமல் இருந்தாலும் பதிவுலகத்தை அடுத்த கட்டத்துக்கு நகர்தியே தீர வேண்டும் என்று என்னை விட தீவிரமாய் சிந்திக்கும் நண்பர்கள இருவரை அடையாளம் கண்டுக்கொள்ள முடிந்தது. அவர்களோடு தொடர்ந்து விவாதித்து எடுத்த முடிவின்படி தமிழ் பதிவுலகத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த இதோ உங்களுக்காக ஒரு புதிய வலைப்பூ திரட்டியை அறிமுகப்படுத்துகிறோம்.

தமிழ் பதிவுலகை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும் அந்த திரட்டி, உங்கள் www.udanz.com.

எனது பிறந்த நாள் ஆகியே நேற்றே இதை தமிழ் கூறும் நல்லுகிற்கு அற்பணிக்க வேண்டும் என எங்கள் தொழில்நுட்பக் குழு இடையறாது பணியாற்றி வந்தது. ஆனாலும் ஒரு சில தவிர்க்க இயலாத தொழில்நுட்ப காரணங்களால் இன்று தான் எங்கள் திரட்டியை உங்களுக்கு சமர்பிக்கின்றோம்.

பதிவுலக மக்கள் அனைவரும் இந்த திரட்டியை பிரபலப்படுத்தி எங்களுக்கு உங்களது நல் ஆதரவை வழங்குமாறு அன்போடு வேண்டுகிறோம்.

குழந்தையாய் உங்களிடம் வந்து கொண்டிருக்கும் எங்கள் திரட்டியில் குறைகள் ஏதுமிருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்துங்கள். மேலும் ஏதேனும் புதிய வசதிகள் ஏற்படுத்தலாம் என நினைத்தாலும் அதையும் எங்களுக்கு தெரியப்படுத்துங்கள்.

உங்கள் வாழ்த்துக்களும், கருத்துகளையும் அன்போடு எதிர் நோக்குகின்றோம்.

இப்படிக்கு,
யுடான்ஸ் குழுவினரின் சார்பாக

ஜோசப் பால்ராஜ்
உண்மையான ஓனர் வந்து நான் தான் ஓனருன்னு சொல்லுற வரைக்கும் நான் தாண்டா ஓனரு .


Udanz
This entry was posted on 9:15 PM and is filed under , , , . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

5 comments:

On Tue Jul 19, 03:23:00 PM GMT+8 , iniyavan said...

இதுக்காகத்தான் இவ்வளவு நாள் கழித்து எழுத வந்தீங்களா?

 
On Tue Jul 19, 10:07:00 PM GMT+8 , கவிதை வீதி... // சௌந்தர் // said...

தங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள்...

 
On Tue Jul 19, 10:07:00 PM GMT+8 , கவிதை வீதி... // சௌந்தர் // said...

திரட்டிகளில் தங்களுக்கென்று தனி முத்திரை கிடைக்க வாழ்த்துக்கள்...

 
On Tue Jul 19, 10:23:00 PM GMT+8 , கவிதை வீதி... // சௌந்தர் // said...

தங்கள் திரட்டியின் Click Here - Link to Udan எனது தளத்தில் இணைத்து அதை கிளிக் செய்தால் தங்களுடைய திரட்டி ஓபன் ஆகவில்லை...
அதை கவனியுங்கள்...

 
On Tue Jun 19, 04:13:00 PM GMT+8 , விருச்சிகன் said...

புதுசா ஒரு திரட்டி இணைப்பு குடுத்து இருக்கிங்கலேன்னு அங்கே பொய் பார்த்தால்... கீழே குடுத்து இருக்கிற மாதிரி மேட்டர் தான் நிறைய இருக்கு. கொஞ்சம் பில்ட்டர் பண்ணி போடுங்க சார். இல்லன்னா.. இதுக்கும் சரோஜாதேவி மாதிரி ப்ளோக்க்கும் வித்தியாசம் இல்லாமல் போயிடும்.

தட்ட தட்ட பெரிதாகும் பெண்களிள் மார்பகங்கள்..!(படங்கள் இணைப்பு)
துணை நடிகைகளுடன் உல்லாசம் புரிந்த நடிகர் கைது
மேலாடையின்றி நடிக்கும் நடிகை படங்கள்
சில்மிச இயக்குனரால் சீரழியும் சீரியல் நாயகிகள்
கேரவேனுக்குள் ஆர்யா நடிகையுடன் அடித்த கூத்து...
ஆண்களுக்கு முன் நின்று மேலாடையை களைந்த பெண்

 
என்னைய மதிச்சு வந்ததுக்கு ரொம்ப நன்றிங்க