Author: ஜோசப் பால்ராஜ்
•11:02 PM
அன்பார்ந்த சிங்கப்பூர் வாழ் பதிவர்களே,
நேற்று கோவையில் நடந்து முடிந்த பதிவர் மாநாட்டில் சிங்கப்பூரில் இருந்துகொண்டே கலந்துகொண்ட நான், சிங்கப்பூரில் நேரடியாக கலந்துகொண்டு உங்களையெல்லாம் சந்திக்க மிக்க ஆவலாக உள்ளேன்.

பதிவர் சந்திப்பு குறித்து சிங்கப்பூரின் மூத்த பதிவரும், பதிவர் சந்திப்புகள் பல கண்டவருமாகிய அண்ணண் கோவி.கண்ணண் அவர்களுடன் நான் கடந்த சனிக்கிழமை தொலைபேசியில் உரையாடிய போது, 26.07.2008 சனிக்கிழமை மாலை சந்திப்பை வைத்துக்கொள்ளலாம், அறிவிப்பை வெளியிடுங்கள் என்று கூறினார்.

சிங்கை பதிவர்கள் அனைவரும் உங்களது விருப்பத்தை தெரிவியுங்கள்.

மாநாட்டு தேதியில் மாற்றம் செய்ய வேண்டுமெனில் குறிப்பிடுங்கள்.
மாநாட்டிற்கான இடம், நேரம் போன்றவை குறித்த உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.
என்னை தொடர்புகொள்ள:
அலைபேசி எண் : +65 - 93372775.
மின்னஞ்சல் முகவரி : joseph.paulraj@gmail.com.

உங்கள் பேராதரவை வேண்டுகின்றேன்.

இப்படிக்கு ,
அ.ஜோசப் பால்ராஜ்.
சிங்க‌ப்பூர். Udanz
This entry was posted on 11:02 PM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

47 comments:

On Tue Jul 15, 12:00:00 AM GMT+8 , கோவி.கண்ணன் said...

ஜோசப்,

உங்களை நேரில் சந்திக்க ஆவலாக உள்ளேன். பதிவர்கள் படைகள் திரளட்டும்.

'பதியதோர்' உலகம் செய்வோம்

பெண் பதிவர்களும் சந்திப்பில் பெரும அளவில் கலந்து கொள்ளவேண்டும்.

சிம்லிம் ஸ்கொயர் கீழே FOOD COURT மையமான இடம், வந்து செல்வதற்கு தொந்தரவு இல்லாத இடம். மற்ற இடங்களென்றாலும் எனக்கு சரிதான்.

 
On Tue Jul 15, 12:39:00 AM GMT+8 , பரிசல்காரன் said...

முதலில் சந்திப்புக்கு வாழ்த்துக்கள்!

இங்கே வந்திருந்த கிரி சொன்னார் “சிங்கப்பூர் சந்திப்பு மதிரி வராதுங்க” என்று! ஆக்வே, பொறாமையாக இருக்கிறது!

நானும் வர்றேன்ன்னு போட்டுக்குங்க! (பின்ன, அங்கிருந்து நீங்க இங்க வராம கலந்துக்கறப்ப, நான் கலந்துக்க முடியாதா?)

சந்திப்பில பரிசல்காரனின் படைப்புப் புரட்சி பற்றி பதிவர் கோவி.கண்ணன் சிறப்புரையாற்றுவார்!

 
On Tue Jul 15, 12:40:00 AM GMT+8 , பரிசல்காரன் said...

//பெண் பதிவர்களும் சந்திப்பில் பெரும அளவில் கலந்து கொள்ளவேண்டும்.//

இது எல்லா ஊர் சந்திப்புக்கும் default வேண்டுகோளா இருக்கே?

 
On Tue Jul 15, 01:12:00 AM GMT+8 , Subramanian said...

நானும் வந்து விடுகிறேன்.ஓரமா ஒரு சீட் கொடுத்தாப் போதும்.

 
On Tue Jul 15, 09:36:00 AM GMT+8 , ஜோ/Joe said...

முடிந்த அளவு வர முயற்சிக்கிறேன்.

 
On Tue Jul 15, 10:29:00 AM GMT+8 , ஜெகதீசன் said...

//
சிம்லிம் ஸ்கொயர் கீழே FOOD COURT மையமான இடம், வந்து செல்வதற்கு தொந்தரவு இல்லாத இடம். மற்ற இடங்களென்றாலும் எனக்கு சரிதான்.
//
கோவி.அண்ணே.... உங்களுக்கு சிம்லிம் ஸ்கொயர் விட்டா வேற இடமே தெரியாதா????
:P

 
On Tue Jul 15, 10:32:00 AM GMT+8 , கோவி.கண்ணன் said...

//ஜெகதீசன் said...
கோவி.அண்ணே.... உங்களுக்கு சிம்லிம் ஸ்கொயர் விட்டா வேற இடமே தெரியாதா????
:P
//

சிம்ரன் ஸ்கொயர் சிங்கையில் இல்லையே.

 
On Tue Jul 15, 10:32:00 AM GMT+8 , கோவி.கண்ணன் said...

//ஜோ / Joe said...
முடிந்த அளவு வர முயற்சிக்கிறேன்.
//

ரொம்ப பிகு பண்ணாதிங்க, வந்து சேருங்க

 
On Tue Jul 15, 10:50:00 AM GMT+8 , ஜோ/Joe said...

சிம்லிம் ஸ்கொயர் கீழே FOOD COURT -ல கோவியாருக்கு கமிஷன் ஏதாவது இருக்குமோ ?

 
On Tue Jul 15, 11:06:00 AM GMT+8 , ஜெகதீசன் said...

எனது சாய்ஸ்:
இடம்...
Lower Peirce Reservoir Park அல்லது
upper Peirce Reservoir Park
http://www.nparks.gov.sg/cms/index.php?option=com_visitorsguide&task=naturereserves&id=51&Itemid=75

நேரம் : எப்பொழுதானாலும் சரி.. ஆனால் சந்திப்பு கொஞ்சம் அதிக நேரம் இருந்தால் நன்றாக இருக்கும்.. (சென்ற முறை 4 மணி நேரம் மிக விரைவில் சென்றுவிட்டது..)

 
On Tue Jul 15, 11:08:00 AM GMT+8 , ஜோசப் பால்ராஜ் said...

உங்கள் அனைவரையும் நேரில் சந்திக்க நானும் மிக ஆவலாக இருக்கின்றேன்.

நான் எப்படி கோவை பதிவர் சந்திப்பில் கலந்துகொண்டேனோ, அதோபோல் பரிசல்காரரும், சிங்கை சந்திப்பில் கலந்து கொள்வார்.
( இவர் பரிசல நிப்பாட்டிவைக்கிறதுக்கு வேற இடம் பார்கணும்..)


ஜோ, கட்டாயம் கலந்துகொள்ள முயற்சி செய்யுங்க.

வருகையை உறுதிசெய்த ஜெகதீசன் மற்றும் சர்தார் ஆகியோருக்கு நன்றி.

 
On Tue Jul 15, 11:19:00 AM GMT+8 , Ravichandran Somu said...

பதிவுகள் எழுதாமல் பதிவுகளை மட்டும் படிக்கும் பதிவர் நான். பதிவர் சந்திப்பில் கலந்துகொள்ள நானும் முயற்சி செய்கிறேன்.

-ரவிச்சந்திரன்

 
On Tue Jul 15, 11:51:00 AM GMT+8 , பரிசல்காரன் said...

//நான் எப்படி கோவை பதிவர் சந்திப்பில் கலந்துகொண்டேனோ, அதோபோல் பரிசல்காரரும், சிங்கை சந்திப்பில் கலந்து கொள்வார்.
( இவர் பரிசல நிப்பாட்டிவைக்கிறதுக்கு வேற இடம் பார்கணும்..)//

வேற இடம் எதுக்கு? அதே இடம் போதுமே?

 
On Tue Jul 15, 11:52:00 AM GMT+8 , பரிசல்காரன் said...

// ஜோ / Joe said...
முடிந்த அளவு வர முயற்சிக்கிறேன்.
//

முடிந்த அளவுன்னா எவ்வளவு?
ஒரு பத்து கிலோமீட்டர் இருக்குமா?

 
On Tue Jul 15, 11:54:00 AM GMT+8 , பரிசல்காரன் said...

//ரவிச்சந்திரன் said...
பதிவுகள் எழுதாமல் பதிவுகளை மட்டும் படிக்கும் பதிவர் நான்.//

பிரச்சினை இல்லாத ஆளுப்பா!

 
On Tue Jul 15, 02:15:00 PM GMT+8 , புதுகை.அப்துல்லா said...

இங்கே வந்திருந்த கிரி சொன்னார் “சிங்கப்பூர் சந்திப்பு மதிரி வராதுங்க” என்று! //

நேற்று போனில் பேசும்போது என்னிடமும் கிரி அதையேதான் சொன்னார். எனக்கும் பொறாமையாத்தான் இருக்கு.

 
On Tue Jul 15, 02:46:00 PM GMT+8 , ஜோ/Joe said...

//ரொம்ப பிகு பண்ணாதிங்க, வந்து சேருங்க//

முந்தைய சில சந்திப்புகள் முடிந்த பின்னரே எனக்கு தெரிய வந்தது ..நீங்களாவது ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாமே கோவியாரே!

 
On Tue Jul 15, 02:55:00 PM GMT+8 , பரிசல்காரன் said...

//நேற்று போனில் பேசும்போது என்னிடமும் கிரி அதையேதான் சொன்னார். எனக்கும் பொறாமையாத்தான் இருக்கு.//

இங்க என்னைப்பாத்தப்போ உங்களைப் பத்திகூட பேசினோம் அப்துல்லா!

 
On Tue Jul 15, 02:58:00 PM GMT+8 , பரிசல்காரன் said...

”யோவ்.. பதிவர் மாநாட்டுக்கு வாங்கய்யான்னா யாருய்யா இது இங்க வந்து மொக்கை போட்டுட்டு இருக்கறது? பரிசலைத் தூக்கீட்டு ஓடு!”

“இல்லீங்க சார்.. இப்படி எதுனா போட்டுட்டே இருந்தா தமிழ்மண மறுமொழில வந்துட்டே இருக்குமில்ல.. அதுக்குத்தான்”

”ஓஹோ.. அப்ப சரி! கும்முங்க.. கும்முங்க”

“ஏதோ ராமருக்கு அணில் செஞ்சமாதிரி...”

“ஏய்.. நிறுத்து.. நிறுத்து..”

 
On Tue Jul 15, 03:16:00 PM GMT+8 , ஜோசப் பால்ராஜ் said...

சிங்கப்பூர் பதிவர் சந்திப்புக்கு நானும் மிக ஆர்வமாக காத்திருக்கின்றேன். ஏனென்றால் எனக்கும் இதுதான் முதல் சந்திப்பு.

அப்துல்லா அண்ணா, நீங்களும் சிங்கப்பூர் வாங்க. தங்குமிடம் எல்லாம் நான் பார்த்துக்குறேன். என் வீட்லயே தங்கலாம் நீங்க.

சிங்கப்பூர் பதிவர் சந்திப்பு குறித்த செய்திகளை தமிழ்மணத்தின் மறுமொழிப் பட்டியலில் எப்போதும் வைத்திருக்க உதவும் பரிசல்காரரை பாராட்டி தீர்மானம் ஒன்று எமது மாநாட்டில் நிறைவேற்றப்படும் என்பதை விழாக்குழுவின் சார்பாக அறிவிக்கிறேன்.

 
On Tue Jul 15, 03:29:00 PM GMT+8 , Tamilcooking Admin said...

வாழ்த்துக்கள்:)

 
On Tue Jul 15, 03:52:00 PM GMT+8 , குசும்பன் said...

முதலில் சந்திப்புக்கும் , சாப்பாடும் நல்லபடியா நடக்க வாழ்த்துக்கள்

 
On Tue Jul 15, 03:54:00 PM GMT+8 , குசும்பன் said...

கோவி.கண்ணன் said...
ஜோசப்,

'பதியதோர்' உலகம் செய்வோம்///

அண்ணே என்னானே ஏதோ சட்டி பானை, பொங்கல் வடை செய்வது போல் புதியதோர் உலகம் செய்வோம் என்று சொல்லிட்டீங்க....

அதுக்கு தேவையான பொருட்கள், செய்முறை எல்லாம் சொன்னா சந்திப்பின் பொழுது மற்றவர்கள் எடுத்துவர உதவியாக இருக்கும்.

 
On Tue Jul 15, 03:56:00 PM GMT+8 , குசும்பன் said...

கோவி.கண்ணன் said...
பெண் பதிவர்களும் சந்திப்பில் பெரும அளவில் கலந்து கொள்ளவேண்டும்.///

நான் ஒன்னும் சொல்வதுக்கு இல்லை.

***************************
பரிசல்காரன் said...
சந்திப்பில பரிசல்காரனின் படைப்புப் புரட்சி பற்றி பதிவர் கோவி.கண்ணன் சிறப்புரையாற்றுவார்!///

இது போல் அசம்பாவிதம் ஏதும் நடந்தால் எல்லோரும் கிளம்பி போய்விடுவார்கள்.

 
On Tue Jul 15, 03:57:00 PM GMT+8 , குசும்பன் said...

ஜோ / Joe said...
சிம்லிம் ஸ்கொயர் கீழே FOOD COURT -ல கோவியாருக்கு கமிஷன் ஏதாவது இருக்குமோ ?//

Food courtடே அவருடையதுதான்.

 
On Tue Jul 15, 04:10:00 PM GMT+8 , புதுகை.அப்துல்லா said...

அப்துல்லா அண்ணா, நீங்களும் சிங்கப்பூர் வாங்க. தங்குமிடம் எல்லாம் நான் பார்த்துக்குறேன். என் வீட்லயே தங்கலாம் நீங்க.


ஆஹா!அண்ணே உங்க அன்புக்கு நான் என்ன கைமாறு செய்ய?கண்டிப்பா அப்பா,அம்மா,பொண்டாட்டி,பிள்ளைகள்,மாமனார்,மாமியார்,மைத்துனர்கள் மற்றும் சில நண்பர்களோட வந்துடுறேன். வீட்டை ரெடியா வச்சுக்கங்க.

 
On Tue Jul 15, 04:15:00 PM GMT+8 , ஜோசப் பால்ராஜ் said...

//" கண்டிப்பா அப்பா,அம்மா,பொண்டாட்டி,பிள்ளைகள்,மாமனார்,மாமியார்,மைத்துனர்கள் மற்றும் சில நண்பர்களோட வந்துடுறேன். வீட்டை ரெடியா வச்சுக்கங்க."//.

சற்றுமுன் வந்த செய்தி:
என்னைய உகாண்டால இருக்க எங்க நிறுவன கிளைக்கு மென்பொருள் நிறுவுதல் பணிக்காக ஒரு வருடம் அனுப்புறாங்க. அதனால நாளைக்கே நான் சிங்கப்பூர விட்டு கிளம்பியாகணுமாம்.

 
On Tue Jul 15, 04:48:00 PM GMT+8 , ஜோ/Joe said...

//என்னைய உகாண்டால இருக்க எங்க நிறுவன கிளைக்கு மென்பொருள் நிறுவுதல் பணிக்காக ஒரு வருடம் அனுப்புறாங்க. அதனால நாளைக்கே நான் சிங்கப்பூர விட்டு கிளம்பியாகணுமாம்.//

:))))

 
On Tue Jul 15, 08:01:00 PM GMT+8 , ராயன்-Rayan said...

சந்திப்பு சிந்திப்பு நல்லமுறையில் அமைய வாழ்த்துகள்...:)

 
On Tue Jul 15, 08:40:00 PM GMT+8 , புதுகை.அப்துல்லா said...

//சற்றுமுன் வந்த செய்தி:
என்னைய உகாண்டால இருக்க எங்க நிறுவன கிளைக்கு மென்பொருள் நிறுவுதல் பணிக்காக ஒரு வருடம் அனுப்புறாங்க. அதனால நாளைக்கே நான் சிங்கப்பூர விட்டு கிளம்பியாகணுமாம்.//

ஹா..ஹா..ஹா

 
On Wed Jul 16, 02:42:00 AM GMT+8 , பரிசல்காரன் said...

//பரிசல்காரன் said...
சந்திப்பில பரிசல்காரனின் படைப்புப் புரட்சி பற்றி பதிவர் கோவி.கண்ணன் சிறப்புரையாற்றுவார்!///

இது போல் அசம்பாவிதம் ஏதும் நடந்தால் எல்லோரும் கிளம்பி போய்விடுவார்கள்.//

ஏன் சாமீ? அதுல உங்களுக்கென்ன காண்டு? கிடைக்கற பஜ்ஜில ஆளுக்கு பாதி எடுத்துக்குவோம்! என்ன?

 
On Wed Jul 16, 02:43:00 AM GMT+8 , பரிசல்காரன் said...

//சிங்கப்பூர் பதிவர் சந்திப்பு குறித்த செய்திகளை தமிழ்மணத்தின் மறுமொழிப் பட்டியலில் எப்போதும் வைத்திருக்க உதவும் பரிசல்காரரை பாராட்டி தீர்மானம் ஒன்று எமது மாநாட்டில் நிறைவேற்றப்படும் என்பதை விழாக்குழுவின் சார்பாக அறிவிக்கிறேன்.//

இதை நான் வழிமொழிகிறேன்.

(ஒஹோ.. நானே வழிமொழியக்கூடாதோ?)

 
On Wed Jul 16, 02:45:00 AM GMT+8 , பரிசல்காரன் said...

//சற்றுமுன் வந்த செய்தி:
என்னைய உகாண்டால இருக்க எங்க நிறுவன கிளைக்கு மென்பொருள் நிறுவுதல் பணிக்காக ஒரு வருடம் அனுப்புறாங்க. அதனால நாளைக்கே நான் சிங்கப்பூர விட்டு கிளம்பியாகணுமாம்.//

அதானே.. என்னையப் பாராட்டறதா நீங்க சொன்னது உங்க ஆபீஸ்ல யாருக்கோ தெரிஞ்சுடுச்சு போல!

(பரிசல்காரனைப் பாராட்டறதா நீங்க சொன்னது உங்க ஆபீஸ்ல யாருக்கோ தெரிஞ்சுடுச்சு போல! அப்படீன்னு வேற யாராவது பின்னூட்டறதுக்கு முன்னாடி நான் முந்திகிட்டேன்!)

 
On Wed Jul 16, 02:46:00 AM GMT+8 , பரிசல்காரன் said...

இன்னைக்கி இவ்ளோதான்! நாளைக்குப் பாக்கலாம்!

 
On Wed Jul 16, 01:26:00 PM GMT+8 , குசும்பன் said...

பரிசல்காரன் said...
ஏன் சாமீ? அதுல உங்களுக்கென்ன காண்டு? கிடைக்கற பஜ்ஜில ஆளுக்கு பாதி எடுத்துக்குவோம்! என்ன?//

டீல் ஓக்கே, பெருசு உங்களை பற்றி பேருரையே ஆற்றலாம். அல்ரெடி என்னிடம் நேற்று ஆற்றினார்.:)))

 
On Wed Jul 16, 02:48:00 PM GMT+8 , பரிசல்காரன் said...

//குசும்பன் said...

பரிசல்காரன் said...
ஏன் சாமீ? அதுல உங்களுக்கென்ன காண்டு? கிடைக்கற பஜ்ஜில ஆளுக்கு பாதி எடுத்துக்குவோம்! என்ன?//

டீல் ஓக்கே, பெருசு உங்களை பற்றி பேருரையே ஆற்றலாம். .:)))//

இந்த பஜ்ஜி ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டமைக்காக விழாக்குழுவினர், குசும்பனுக்கு பஜ்ஜியுடன் சட்னி இலவசமாயளிப்பார்கள் என்று அறிவிக்கப்படுகிறது!

//அல்ரெடி என்னிடம் நேற்று ஆற்றினார்//

கேள்விப்பட்டேன்! ஒரு ஒற்றூமை தெரியுமா? அவர் என்னைப்பற்றி உங்களிடம் சொல்லிக்கொண்டிருந்த அதே நேரம் இங்கே வடகரைவேலன் உங்களைப் பற்றி என்னிடம் சொல்லிக்கொண்டிருந்தார்! விதி!

 
On Wed Jul 16, 02:50:00 PM GMT+8 , பரிசல்காரன் said...

ஜோசப் பால்ராஜ்: யோவ்.. இது பதிவர் மாநாட்டுக்குக்கான பதிவுய்யா. இங்க வந்து கும்மியடிக்கற பரிசல்காரனையும், குசும்பனையும் ஆரும் கேள்வியே கேட்க மாட்டீங்களா? என்ன கொடுமை கண்ணன் இது?

கண்ணன்: ஹி..ஹி.. நாந்தான் அவங்களை இப்படி...

ஜோ.பா: என்னது?? (மயங்கி விழுகிறார்)

 
On Wed Jul 16, 02:58:00 PM GMT+8 , ஜோசப் பால்ராஜ் said...

நேத்து ராத்திரி முழுக்க (அமெரிக்க பகல் நேரத்துல ) ஆணி புடுங்குனதுனால, இன்னிக்கு ஓய்வெடுத்துக்கோடானு சொன்னதுனால கொஞ்சம் நேரம் கழிச்சு எழுந்திருச்சு வந்து பார்த்தா, என்னைய வைச்சே காமெடி பண்றாங்கப்பா..

பஜ்ஜி, டீ பொன்றவை எல்லாம் இன்னும் விழாக்குழுவால் அங்கீகரிக்கப்படவில்லை. எனவே போலி அறிவிப்புக்களை கண்டு ஏமாற வேண்டாம் என்று மாநாட்டுக்குழு தலைவர் கோவி.கண்ணன் அவர்கள் சார்பாக தெரிவித்துக்கொள்கிறேன்.

பஜ்ஜி அறிவிப்புக்கள் எல்லாம் எமது மாநாட்டின் சிறப்பை குலைக்க நடக்கும் வெளிநாட்டுச் சதிகள். இதை கடுமையாக கண்டிக்கிறோம்.

(அப்பா, வெளி நாட்டு சதி அது இதுனு சொன்னாதன் நம்ம மாநாட்டுக்கு ஒரு பெரிய மதிப்பு கிடைக்கும்.)

 
On Wed Jul 16, 03:19:00 PM GMT+8 , ஜெகதீசன் said...

//
பஜ்ஜி அறிவிப்புக்கள் எல்லாம் எமது மாநாட்டின் சிறப்பை குலைக்க நடக்கும் வெளிநாட்டுச் சதிகள்.
//
இந்தச் சதி அமீரகப் பதிவர்கள் சிலர் இந்தியப் பதிவர்களுடன் சேர்ந்து தீட்டிய சதி எனத் தெரியவந்துள்ளது.. இது குறித்து அவர்களின் தொலைபேசி உரையாடல் DVD யாக என்னிடத்தில் உள்ளது... விரைவில் வெளியிடுவேன்..

 
On Wed Jul 16, 10:06:00 PM GMT+8 , பரிசல்காரன் said...

//பஜ்ஜி, டீ பொன்றவை எல்லாம் இன்னும் விழாக்குழுவால் அங்கீகரிக்கப்படவில்லை. எனவே போலி அறிவிப்புக்களை கண்டு ஏமாற வேண்டாம் என்று மாநாட்டுக்குழு தலைவர் கோவி.கண்ணன் அவர்கள் சார்பாக தெரிவித்துக்கொள்கிறேன். //

என்னாது? பஜ்ஜி, டீ இல்லையா?

ஐயகோ! என்ன இது தமிழ்வலயுலகப்பதிவர்களுக்கு நேர்ந்த அவமானம்!
வெட்கம்!
வேதனை!!
துக்கம்!!!
துயரம்!!!!
(எல்லாம் ஒண்ணுதாண்டா!)

இதை எதிர்த்துப் போராட, போராளிகளே ஒன்றுதிரள்வீர்.
படையெடுப்பீர் சிங்கைக்கே!

 
On Wed Jul 16, 10:07:00 PM GMT+8 , பரிசல்காரன் said...

//இது குறித்து அவர்களின் தொலைபேசி உரையாடல் DVD யாக என்னிடத்தில் உள்ளது... விரைவில் வெளியிடுவேன்..//

இவருதான் சுப்பிரமணிய சாமியோட பினாமி போல!

 
On Wed Jul 16, 10:10:00 PM GMT+8 , பரிசல்காரன் said...

அன்பு விழாக்குழுவினருக்கு..

சும்மா கும்மி மட்டும் போடாமல்
ஒரு உருப்படியான காரியம் செய்திருக்கிறேனாக்கும்!

சிங்கப்பூரிலிருந்து இந்தியா வந்திருக்கும் பதிவர் ”கிரி”யைத் தொடர்பு கொண்டு, இந்தச் சரித்திரப் புகழ்மிக்க மாநாட்டைப் பற்றிக் கூறி, அவரை கலந்து கொள்ளச் சொல்லியிருக்கிறேன்!

ஆக, நம்ம பங்குக்கு ஒரு ஆள் சேர்த்தாச்சு!

 
On Fri Jul 18, 09:12:00 PM GMT+8 , பரிசல்காரன் said...

//ஜாதி, மத, இன பழிப்புகள் இல்லாத, தனி நபர் தாக்குதல் இல்லாத, ஆபாசமில்லாத உங்கள் கருத்துக்களை இங்கே பதிவுசெய்யுங்கள். /

JAI HIND!

 
On Fri Jul 18, 09:12:00 PM GMT+8 , பரிசல்காரன் said...

//ஜாதி, மத, இன பழிப்புகள் இல்லாத, தனி நபர் தாக்குதல் இல்லாத, ஆபாசமில்லாத உங்கள் கருத்துக்களை இங்கே பதிவுசெய்யுங்கள். /

JAI HIND!

 
On Tue Jul 22, 01:36:00 PM GMT+8 , கிரி said...

சொல்லிட்டீங்கல்ல..வந்துடறோம்

//பரிசல்காரன் said...
சிங்கப்பூரிலிருந்து இந்தியா வந்திருக்கும் பதிவர் ”கிரி”யைத் தொடர்பு கொண்டு, இந்தச் சரித்திரப் புகழ்மிக்க மாநாட்டைப் பற்றிக் கூறி, அவரை கலந்து கொள்ளச் சொல்லியிருக்கிறேன்//

கே கே நமக்கு வேற என்ன வேலைங்க ..போய் ஐக்கியமாகி விட வேண்டியது தான்,

 
On Sun Aug 03, 12:09:00 AM GMT+8 , கோவை விஜய் said...

நாளை கூடும் சிங்கை பதிவர் சந்திப்புக்கு

நெஞ்சம் நிறை வாழ்த்துக்கள்.


கோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com/

 
On Tue Apr 21, 05:26:00 PM GMT+8 , Antony Robert said...

வாழ்த்துக்கள்

 
என்னைய மதிச்சு வந்ததுக்கு ரொம்ப நன்றிங்க