Author: ஜோசப் பால்ராஜ்
•8:49 PM
கடந்த ஞாயிறன்று சிங்கையில் நடந்த பதிவர் சந்திப்பில் சிங்கை மூத்த பதிவரும், கட்டுமானத்துறையில் பணியாற்றுபவருமான வடுவூர் குமார் அவர்கள் தற்போது துபாயில் வேலையில் சேர இருப்பதாக கூறினார்.

அவர் துபாய் வேலைக்காக முயற்சி செய்ய ஆரம்பித்த பொழுது துபாய் விசா குறித்த நடைமுறைகள் எதுவும் தெரியாமல் மிகச் சிரமப்பட்டதாகவும், அதுகுறித்து யாராவது ஒரு பதிவு எழுதினால் மிக நன்றாக இருக்கும் என்று கூறினார். வளைகுடா நாடுகளில் உள்ள தமிழ் பதிவர்கள் அந்த பகுதி நாடுகளில் உள்ள வேலை தேடி வருபவர்களுக்கு உதவும் நோக்கில் அங்குள்ள நாடுகளின் விசா நடைமுறைகளையும், வேலைக்கு வருபவர்கள் செய்ய வேண்டியவைகளையும் விரிவாக எழுதுமாறு சிங்கை பதிவர்கள் சார்பாக கேட்டுகொள்கிறோம்.

மேலும் துபாய் வரும் எங்கள் கண்ணின் மணி போல காத்துவந்த அன்புக்குரிய வடுவூர் குமார் அவர்களை நல்லபடியாக பார்த்துக்கொள்ளுமாறும் எங்கள் அனைவரின் சார்பாக வேண்டுகிறோம்.

மேலும் எங்கள் அனைவராலும் சிங்கைப் பதிவர்கள் சந்திப்பு குறித்து எழுத‌ப்ப‌ட்ட‌ ப‌திவுக‌ளில் விடுப‌ட்ட‌ ஒரு விச‌ய‌த்தையும் சொல்ல‌ விரும்புகிறேன்.

ச‌ந்திப்பு ந‌ட‌ந்த‌ புல்வெளியில் இருந்து கிள‌ம்பி காபி குடிக்க‌ போகும்முன் ந‌டைபாதையில் நிக‌ழ்ந்த‌ விவாத‌ம் வ‌லையுல‌கில் த‌ற்போது மிக‌ பிர‌ப‌ல‌மாகிக்கொண்டிருக்கும் பின் ந‌வீன‌த்துவ‌த்தை குறித்த‌து. பின் ந‌வீன‌த்துவ‌ம் என்றால் என்ன‌ என்ற‌ அடிப்ப‌டை கேள்விக்கே எங்க‌ளால் விடை காண‌ முடிய‌வில்லை. க‌டைசியாக‌ இரு ப‌தில்க‌ளை ப‌திவ‌ர்க‌ள் ச‌பை ஏற்றுக்கொண்ட‌து. இந்த‌ ப‌தில்க‌ள் குறித்து பின் ந‌வீன‌த்துவ‌ம் குறித்து அறிந்த‌ சென்ஷி போன்ற‌ ப‌திவ‌ர்க‌ள் த‌ய‌வு செய்து பின்னூட்ட‌த்தில் தெரிவிக்க‌வும்.

ப‌தில் 1. முற்றுப்புள்ளியே இல்லாம‌ல் எழுதிகொண்டே சென்றால் அது பின்ந‌வீன‌த்துவ‌ம்

ப‌தில் 2. யாருக்குமே புரியாம‌ல் எழுத‌ப்ப‌ட்டிருக்கும், அத‌ற்கு ஆகா, ஓகோ என‌ ப‌ல‌ பின்னூட்ட‌ங்க‌ள் இருக்கும். இதுவும் பின் ந‌வீன‌த்துவ‌ம்.

பி.கு:
மாற்ற‌ங்க‌ளை உள்வாங்கிக் கொள்வ‌துதான் பின் ந‌வீன‌த்துவ‌ம் என்று ப‌ல‌ புரியாத‌ ப‌தில்க‌ள் அங்கு விவ‌ரிக்க‌ப்ப‌ட்டாலும், எங்க‌ள் அனைவ‌ராலும் ஏற்றுக்கொள்ள‌ப்ப‌ட்ட‌ ப‌தில்க‌ள் மேலே குறிப்பிட‌ப்ப‌ட்ட‌ 2 ப‌தில்க‌ள் ம‌ட்டுமே. எனவே பின்நவீனத்துவ வாதிகள் தயவு செய்து எங்கள் மேல் பாய்ந்துவிடாமல் உண்மையான விளக்கத்தை சொல்லவும்.


Udanz
This entry was posted on 8:49 PM and is filed under , . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

15 comments:

On Thu Aug 07, 09:36:00 AM GMT+8 , ஜெகதீசன் said...

me the first!!

 
On Thu Aug 07, 09:44:00 AM GMT+8 , Anonymous said...

http://umakathir.blogspot.com/2007/03/blog-post_8896.html

 
On Thu Aug 07, 11:37:00 AM GMT+8 , விஜய் ஆனந்த் said...

நானும் மீ த பஷ்ட்ட்டூ !!!!!!!

 
On Thu Aug 07, 12:12:00 PM GMT+8 , கோவை விஜய் said...

பயங்கரவாதத்தை விட மனித இனத்திற்கு அதிக அழிவைத்தர காத்திருக்கும் "குளோபல் வார்மிங்" பற்றிய

விழிப்புணர்வுக்காக நாளை ( 08-08-2008) இரவு எட்டு மணிக்கு எட்டு நிமிடங்கள் மின்சார

விளக்குகளையும்,மின் சாதனங்களையும் உபயோகிப்பதை முற்றிலும் தவிர்ப்போம்.

உலகின் வெப்பமயமாதலின் தீமைகளை எதிர்க்க அணி திரள்வோம்


ஒன்றுபடுவோம்
போராடுவோம்
தியாகம் செய்வோம்

இறுதி வெற்றி நமதே


மனிதம் காப்போம்
மானுடம் காப்போம்.

இயற்கை அன்னையை வணங்கி மகிழ்வோம்.


கோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com/

 
On Thu Aug 07, 09:19:00 PM GMT+8 , குசும்பன் said...

http://kusumbuonly.blogspot.com/2007/11/uae.html

http://kusumbuonly.blogspot.com/2008/05/blog-post_28.html

 
On Thu Aug 07, 09:25:00 PM GMT+8 , குசும்பன் said...

//மேலும் துபாய் வரும் எங்கள் கண்ணின் மணி போல காத்துவந்த அன்புக்குரிய வடுவூர் குமார் அவர்களை நல்லபடியாக பார்த்துக்கொள்ளுமாறும் எங்கள் அனைவரின் சார்பாக வேண்டுகிறோம். //

முதல் விசயம் வந்ததும் முதல் வேலை இங்கு இருக்கும் பதிவர்களுக்கு மனம் குளிரும் வரை படையல் வைக்கனும்..
இல்லை என்றால் கராமா பார்க்கில் ராக்கிங் நடைபெறும்

 
On Fri Aug 08, 07:17:00 AM GMT+8 , கோவை விஜய் said...

விசா பற்றிய தகவல் அனைவருக்கு நன்மை பயக்கும்

பின் ந‌வீன‌த்துவ‌ம் விவாதம் தொடர்ந்தால் இன்னும் விதிகள் சேர்க்கப் பட்டு, வலைப்பதிவில் பதிவர்களும் ,பார்வையாளர்களும்,பின்னூட்டம் இடும் செம்மல்களும் மகிழ்ச்ச்யுட்ன் தம் சீரிய பணி தொட்ர்ந்தால் அது தமிழ் பதிவுலகை அடுத்த இலக்கை நோக்கி கை பிடித்து அழைத்து செல்லும் அந்த அழகை பார்க்க கண் கோடி வேண்டும்,கவிஞர்கள் கவி புனைய தமிழன்னையின் அரியணை மகோன்னத நிலை அடைந்து....

 
On Fri Aug 08, 03:15:00 PM GMT+8 , கோவி.கண்ணன் said...

மீ த எ(ய்)ட்டு.....

 
On Fri Aug 08, 03:35:00 PM GMT+8 , anujanya said...

ஜோசப்,

ரொம்பத்தான் லொள்ளு உங்களுக்கு. பின்நவீனத்துவம் நவீன ஓவியங்கள் மாதிரி. அவரவர் வாசிப்பு மற்றும் பார்வையில் வெவ்வேறு தளங்களில் புரிந்துகொள்ளல் இருக்கும். (இதுவே பி.ந.துவமாக இருக்கா?)

அனுஜன்யா

ஓலைச்சுவடி பாருங்கள்

 
On Sat Aug 09, 02:32:00 AM GMT+8 , சென்ஷி said...

//முதல் விசயம் வந்ததும் முதல் வேலை இங்கு இருக்கும் பதிவர்களுக்கு மனம் குளிரும் வரை படையல் வைக்கனும்..
இல்லை என்றால் கராமா பார்க்கில் ராக்கிங் நடைபெறும்//

அப்புறம் ரெண்டாம் விசயம் மறந்து கூட குசும்பன் கிட்ட போன் நம்பர் கொடுத்துடக்கூடாது. அதுக்கப்புறம் அய்யோ.. அம்மான்னு கத்துனா யாரும் காப்பாத்த வரமாட்டாங்க :(

டிஸ்கி: அனுபவம் பேசுகிறது :)

 
On Sun Aug 10, 08:36:00 PM GMT+8 , Anonymous said...

//ப‌தில் 1. முற்றுப்புள்ளியே இல்லாம‌ல் எழுதிகொண்டே சென்றால் அது பின்ந‌வீன‌த்துவ‌ம்

ப‌தில் 2. யாருக்குமே புரியாம‌ல் எழுத‌ப்ப‌ட்டிருக்கும், அத‌ற்கு ஆகா, ஓகோ என‌ ப‌ல‌ பின்னூட்ட‌ங்க‌ள் இருக்கும். இதுவும் பின் ந‌வீன‌த்துவ‌ம்.//


இது தானா??

 
On Wed Aug 13, 09:17:00 PM GMT+8 , வடுவூர் குமார் said...

இப்போது தான் பார்க்கிறேன்,இந்த பதிவை.
மிக்க நன்றி.
விசா பிரச்சனை நூடூஸ்க்கு மேல் சிக்கலாகிக்கொண்டுவருகிறது.
குசும்பன் என்னைவிட்டுங்க நான் பார்ட்டி கொடுத்துவிடுகிறேன். :-))

 
On Wed Aug 13, 09:24:00 PM GMT+8 , வடுவூர் குமார் said...

கதிரு சொல்லியிருக்கும் பதிவு மார்ச் 2007யில் போட்டது,இப்போது பல விதிமுறைகள் மாறிவிட்டன.
புதியவர்கள் கவனத்தில் கொள்ளவும்.

 
On Wed Aug 13, 09:29:00 PM GMT+8 , வடுவூர் குமார் said...

குசும்பன் கொடுத்திருக்கும் சுட்டியில் உள்ள தகவல்கள் இந்நாளில் பொருந்துமா? என்று அவர் தான் சொல்லனும்.
மார்ச் 2008க்கு பிறகு பல விதிமுறைகள் துபாய் அரசாங்கம் கொண்டுவந்துள்ளது.என்னுடைய கடவுச்சீட்டு மற்றும் சர்டிபிகேட் துபாய் போய் திரும்பி வந்துவிட்டது.இன்றைய நிலவரப்படி விசிட் விசாவில் போய் அங்கு இருக்கும் போது ரெசிடண்ட் விசா வாங்கனும் என்று சொல்கிறார்கள்.மொத்தத்தில் மகா பெரிய குழப்பமாக இருக்கு.

 
On Sun Aug 17, 06:59:00 PM GMT+8 , மங்களூர் சிவா said...

/
//முதல் விசயம் வந்ததும் முதல் வேலை இங்கு இருக்கும் பதிவர்களுக்கு மனம் குளிரும் வரை படையல் வைக்கனும்..
இல்லை என்றால் கராமா பார்க்கில் ராக்கிங் நடைபெறும்//

//
அப்புறம் ரெண்டாம் விசயம் மறந்து கூட குசும்பன் கிட்ட போன் நம்பர் கொடுத்துடக்கூடாது. அதுக்கப்புறம் அய்யோ.. அம்மான்னு கத்துனா யாரும் காப்பாத்த வரமாட்டாங்க :(

டிஸ்கி: அனுபவம் பேசுகிறது :)
//

:)))))))))))))))

ROTFL

 
என்னைய மதிச்சு வந்ததுக்கு ரொம்ப நன்றிங்க